Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Lokesh Kanagaraj: கூலி பட ட்ரெய்லர் எப்போது? -லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!

Coolie Movie Trailer Release Update : நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது திரைப்படமாக உருவாகியிருப்பது கூலி திரைப்படம். இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் நேர்காணலில் பேசிய அவர், இந்த கூலி படத்தின் ட்ரெய்லர் எப்போது ரிலீசாகும் என அப்டேட் கொடுத்துள்ளார்.

Lokesh Kanagaraj: கூலி பட ட்ரெய்லர் எப்போது? -லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!
ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 15 Jul 2025 10:46 AM

தமிழ் சினிமாவில் கைதி (Kaithi), மாஸ்டர் (Master) மற்றும் லியோ (Leo) போன்ற படங்களை இயக்கி, மக்கள் மத்தியில் பிடித்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம்தான் கூலி (Coolie). இந்த படத்தில் ரசிகர் ரஜினிகாந்த் முன்னணி நாயகனாக நடிக்க, மேலும் பான் இந்திய மொழி நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். இதில் நடிகர்கள் அமீர்கான் (Aamir Khan), நாகார்ஜுனா (Nagarjina), உபேந்திர ராவ், சௌபின் ஷாஹிர், சத்யராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசன் எனப் பல்வேறு பிரபலங்கள் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படமானது பான் இந்திய மொழிகளில் உருவாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டிலே தலைவர்171 என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூலி படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு ப்ரோமோஷன் பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில், லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் நேர்காணலை ஒன்றில் கலந்துகொண்டார் அதில் அவர் கூலி படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என அப்டேட் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க : துல்கர் சல்மானின் ‘காந்தா’ ஷூட்டிங் நிறைவு.. ரிலீஸ் எப்போது தெரியுமா?

கூலி திரைப்படத்தின் ட்ரெய்லர் எப்போது :

அந்த நேர்காணலில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்,” ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படத்தின் ட்ரெய்லரானது, வரும் 2025, ஆகஸ்ட் 2ம் தேதியில் வெளியாகும்” என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அப்டேட் கொடுத்துள்ளார். இந்த தகவலானது ரஜினிகாந்த்தின் ரசிகர்கள் மத்தியில் சர்ப்ரைஸை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படத்தின் ரிலீசிற்கு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

கூலி பட மோனிகா பாடல் ஹிட் பதிவு :

மோனிகா பாடல் உருவானது எப்படி :

இதையும் படிங்க : மக்கள் குடும்ப படங்களைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் – இயக்குநர் பாண்டிராஜ் ஓபன் டாக்!

கூலி திரைப்படத்திலிருந்து வெளியாகி ட்ரெண்டிங் பட்டியலில் இருக்கும் திரைப்படம்தான் மோனிகா. “இந்த பாடலானது முழுக்க இசையமைப்பாளர் அனிருத்தின் விருப்பத்தில்தான் உருவானதாகவும், நான் அவரை முழுமையாக நம்பினேன். நாங்கள் இருவருமே மோனிகா பெலூஜியின் பாடல் ரசிகர்கள். அதனால் கூலி திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டேவை மோனிகாவாக மாற்றிவிட்டோம்” என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். இந்த பாடலானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.