Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Pandiraaj : மக்கள் குடும்ப படங்களைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் – இயக்குநர் பாண்டிராஜ் ஓபன் டாக்!

Pandiraaj About Family Drama Movie : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ரிலீசிற்கு தயாராகிவரும் படம் தலைவன் தலைவி. இதில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தொடர்பாகச் செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்த நிலையில், அதில் பேசிய இயக்குநர் பாண்டிராஜ் மக்கள் குடும்ப படங்களைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர் எனக் கூறியுள்ளார்.

Pandiraaj : மக்கள் குடும்ப படங்களைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் – இயக்குநர் பாண்டிராஜ் ஓபன் டாக்!
இயக்குநர் பாண்டிராஜ்Image Source: IMDb
Barath Murugan
Barath Murugan | Published: 14 Jul 2025 22:16 PM

நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi ) மற்றும் நித்யா மேனனின் (Nithya Menon) முன்னணி நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் தலைவன் தலைவி (Thalaivan Thalaivii). இந்த படத்தை பிரபல இயக்குநர் பாண்டிராஜ் (Pandiraaj) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படமானது வரும் 2025, ஜூலை 25ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்திற்கு முன் இயக்குநர் பாண்டிராஜ் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படமானது இவருக்கு அந்த அளவிற்கு வரவேற்புகளைக் கொடுக்கவில்லை. இந்த படத்தை அடுத்ததாக இவரின் இயக்கத்தில் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின் ரிலீஸாகவுள்ள படம் தலைவன் தலைவி. இந்த படத்தின் வெளியீட்டை முன்னிட்டு கடந்த 2025, ஜூலை 14ம் தேதியில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றிருந்தது.

அந்த சந்திப்பில் பேசிய இயக்குநர் பாண்டிராஜ், மக்கள் தற்போது குடும்ப கதைகளைக் கொண்ட திரைப்படங்களை விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள், மேலும் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள் என கூறியுள்ளார். மேலும் அவர் பேசியது பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

இதையும் படிங்க : தலைவன் தலைவி படம் ஒரு உண்மை கதை – இயக்குநர் பாண்டிராஜ்!

தலைவன் தலைவி செய்தியாளர்கள் சந்திப்பில் பாண்டியராஜ் பேச்சு :

அந்த சந்திப்பில் பேசிய இயக்குநர் பாண்டிராஜ், “குடும்ப திரைப்படம் என்றாலே சீரியலை போல இருக்கிறது எனக் கூறுவார்கள், மற்றும் மிகவும் கிரிஞ்சாக இருக்கிறது என்று கூறுவார்கள். மொத்தத்தில் குடும்ப கதைக்களம் கொண்ட படங்களை எடுப்பதே மிக பெரிய சவால்தான். குடும்ப படம் எடுப்பது கஷ்டம்தான். கொஞ்சம் விட்டாலும் அது சீரியலாக மாறிவிடும். மேலும் இந்த தலைவன் தலைவி படமும் கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயான கதைதான் , இதை எழுதுவதற்கு நான் நிறைய நாள் டைம் எடுத்துக்கொண்டேன். மேலும் இந்த வருடத்தில் வெளியான குடும்பஸ்தன், லப்பர் பந்து, டூரிஸ்ட் பேமிலி மற்றும் மாமன் போன்ற குடும்ப படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. மேலும் என்னிடம் வரும் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் எல்லாமே குடும்ப திரைப்படங்களைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.

இதையும் படிங்க : அப்படிப்பட்டவருடன் டேட்டிங் செல்வேன்.. விமர்சனத்தில் சிக்கிய ராஷ்மிகா!

பாண்டியராஜ் பேசிய வீடியோ பதிவு :

சொல்லப்போனால் சிவகார்த்திகேயன், கடைக்குட்டி சிங்கம் பட வெற்றிக்கும் பின், அதுபோல ஒரு படம் பண்ணவேண்டும் என்கிறார். அப்படி உருவானதுதான் நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படம். மேலும் இந்த தலைவன் தலைவி திரைப்படம் நன்றாக ஓடினால், பிறகு மற்ற நடிகர்களும் இது போன்ற படங்களைப் பண்ணவேண்டும் என்றுதான் கேட்பார்கள். காதல் படங்கள் என்றால் 2 டிக்கெட் ஆள் போவாங்க, ஹாரர் படம் என்றால் 4 டிக்கெட், ஆனால் குடும்ப திரைப்படம் என்றால் சுமார் 10 டிக்கெட்டுக்கு ஆள் போகும்” என இயக்குநர் பாண்டிராஜ் கூறியிருந்தார்.