Pandiraaj: தலைவன் தலைவி படம் ஒரு உண்மை கதை – இயக்குநர் பாண்டிராஜ்!
Director Pandiraaj About Thalaivan Thalaivi Story : நடிகர் விஜய் சேதுபதியின் முன்னணி நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் தலைவன் தலைவி. இப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இயக்குநர் பாண்டிராஜ், தலைவன் தலைவி திரைப்படமானது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருப்பதாகக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபலம் மிக்க இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் பாண்டிராஜ் (Pandiraaj). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பல குடும்ப திரைப்படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த படங்களின் வரிசையில் இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன் (Etharkkum thunindhavan). இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2022ம் ஆண்டு வெளியாகியிருந்தது. இந்த இடத்தை அடுத்ததாக சுமார் 2 வருடங்களுக்குப் பின் பாண்டிராஜ் இயக்கத்தில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் தலைவன் தலைவி (Thalaivan Thalaivii). இந்த படத்தில் முன்னணி நடிகர்கள் விஜய் சேதுபதி (Vijay sethupathi) மற்றும் நித்யா மேனன் (Nithya Menon)இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது வரும் 2025, ஜூலை 25ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படம் தொடர்பாகச் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு (Press Meet) நடைபெற்றது.
அந்த சந்திப்பில் பேசிய இயக்குநர் பாண்டிராஜ், இந்த தலைவன் தலைவி திரைப்படமானது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் இந்த படம் ஒரு விவாகரத்து தொடர்பான கதைக்களம் கொண்ட திரைப்படமாக இருக்கும் என அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார். அவர் பேசியதை பற்றி பார்க்கலாம்.




இதையும் படிங்க : அப்படிப்பட்டவருடன் டேட்டிங் செல்வேன்.. விமர்சனத்தில் சிக்கிய ராஷ்மிகா!
தலைவன் தலைவி திரைப்படம் குறித்தது பாண்டிராஜ் பேசிய விஷயம் :
சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தலைவன் தலைவி படக்குழு அனைவரும் கலந்துகொண்டிருந்தனர். அந்த சந்திப்பில் செய்தியாளர்களிடம் பேசிய பாண்டிராஜ் , தலைவன் தலைவி திரைப்படத்தைப் பற்றிக் கூறியுள்ளார். அவர் அதில், ” தலைவன் தலைவி திரைப்படத்தின் டைட்டில் மற்றும் கதை தோன்றியது ஒரு அழகான சம்பவம் என்றே கூறலாம். இந்த படத்தை ஒரு உண்மை கதையிலிருந்து எடுத்து பண்ணிருக்கேன். எனது மகனின் பிறந்தநாளுக்காகக் குலதெய்வம் கோவிலுக்குப் போகும்போது, நான் சந்தித்த இரு கதாபாத்திரங்கள்தான் ஆகாச வீரன் மற்றும் பேரரசி.
இதையும் படிங்க : என்னடி சித்திரமே.. இங்க நா பாத்திரமே.. இசை வெளியீட்டு விழாவில் நடனமாடிய விஜய் சேதுபதி – நித்யா மேனன்!
நான் பார்த்ததை அப்படியே எடுத்த திரைப்படமாக இது இருக்காது, இவ்வாறு இருந்தாலே எப்படி இருக்கும் என்பதுதான் இப்படத்தின் கதாபாத்திரங்கள். ஆரம்பத்தில் இப்படத்தின் கதையை நான் சிம்பிளாக எழுதலாம் என நினைத்தேன், ஆனால் எழுத எழுதக் கதையும் வித்தியாசமாக மாறியது. இப்படத்தில் விஜய் சேதுபதியின் ஆகாச வீரன் கதாபாத்திரம், எல்லாரையும் சிரிக்கவைப்பான், அழுக வைப்பான் மற்றும் சித்திரவதை செய்வான், இவர் எந்தக் கதாபாத்திரம் என்றே சொல்ல முடியாது. ஒரு ஹீரோவிற்கான ரோலாக இருக்காது, ஆனால் இந்த கதாபாத்திரத்தையும் யாராலும் பண்ணமுடியாது. அவ்வாறு பண்ணமுடியும் என்றால் அது விஜய் சேதுபதி மட்டும்தான் பண்ணமுடியும் என இயக்குநர் பாண்டிராஜ் பேசியிருந்தார்.
இயக்குநர் பாண்டிராஜ் பேசிய வீடியோ :
Dir Pandiraj At #ThalaivanThalaivi Press Meet
– This story is a story based on a true incident.
– I created this story based on the things I saw at the place I went to when I went to the ancestral temple for my son’s birthday.
pic.twitter.com/89Gh9HUHIo— Movie Tamil (@MovieTamil4) July 13, 2025
சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில்,இந்த தலைவன் தலைவி திரைப்படமானது உருவாகியிருக்கிறது. இதில் யோகிபாபு, ரோஷ்ணி ஹரிப்ரியன் , தீபா சங்கர் மற்றும் சரவணன் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.