Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Silambarasan : வெற்றிமாறன் படம்.. முரட்டு ட்ரான்ஸ்ஃபர்மேசன் செய்யும் சிலம்பரசன்?

Silambarasans Body Transformation : நடிகர் சிலம்பரசனின் நடிப்பில் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் புதிய திரைப்படமானது உருவாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்திற்காக சிலம்பரசன் தற்போது முரட்டு ட்ரான்ஸ்பேர்மேசனில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் வெற்றிமாறனுக்காக சிலம்பரசன் எடுக்கும், முடிவு வெற்றி கொடுக்குமா என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

Silambarasan : வெற்றிமாறன் படம்.. முரட்டு ட்ரான்ஸ்ஃபர்மேசன் செய்யும் சிலம்பரசன்?
சிலம்பரசன் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 13 Jul 2025 19:48 PM

இயக்குநர் வெற்றிமாறனின் (Vetrimaaran) இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் விடுதலை 2 (Viduthalai 2). விஜய் சேதுபதியின் முன்னணி நடிப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்து இயக்குநர் வெற்றிமாறன், சிலம்பரசனுடன் (Silambarasan) புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்த படம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் நேர்காணல் ஒன்றில் ஓபனாக கூறியிருந்தார். இந்த புதிய திரைப்படமானது தனுஷின் (Dhanush) நடிப்பில் வெளியான வட சென்னை (Vada Chennai) திரைப்படத்தின் பின்புலத்தில் நடக்கும் கதையாக உருவாக்கவுள்ளதாம். லோகேஷ் கனகராஜின் படங்களைப் போல, வெற்றிமாறன் வடசென்னை படத்துடன் தொடர்புப்படுத்தி இந்த புதிய திரைப்படத்தை உருவாக்கவுள்ளார். இந்த படத்தின் அறிமுக வீடியோ ஷூட்டிங் கடந்த 2025, ஜூன் மாதத்தில் நடைபெற்றிருந்தது. இது குறித்த புகைப்படம் இணையத்தில் கசிந்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் ஆரம்பமாகாத நிலையில், நடிகர் சிலம்பரசன் இந்த படத்துக்கு உடல் எடையில் குறைக்கும் முயற்சியில் (Silambarasan’s transformation) ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படத்தில் இணைவதற்கு நடிகர் சிலம்பரசன் சுமார் 10 கிலோ உடல் எடையை குறைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : இத்தனை படங்கள் வெயிட்டிங்கா? உச்ச நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

நடிகர் சிலம்பரசன் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு உடல் எடையைக் குறைத்திருந்தார். அந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்தது.  இதனையடுத்து இப்படத்திலும் உடல் எடையைக் குறைக்கவுள்ளார். இதில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக உடல் எடையை குறைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் இந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

சிலம்பரசனின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் புகைப்படம் :

வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசனின் கூட்டணி பட டைட்டில்

இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை படத்தை அடுத்தாக, நடிகர் சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்குவதாக ,சில காரணங்களால் அப்படத்தின் ஷூட்டிங் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறன், சிலம்பரசனுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : கயாடு லோஹர் தவறவிட்ட 2 படங்கள்.. என்ன தெரியுமா?

மேலும் இப்படத்தை வி க்ரியேஷன் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த புதிய படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த புதிய படத்திற்குப் படக்குழு, “ராஜன் வகையார்” என டைட்டில் வைக்க உள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது.

வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசனின் பட அறிமுக வீடியோ

சிலம்பரசன் STR 49 படத்தில் நடித்து வந்த நிலையில், அந்த படத்தின் ஷூட்டிங் சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த படத்தை அடுத்ததாக சிலம்பரசன் உடனே வெற்றிமாறனின் புதிய படத்தில் இணைந்துள்ளார். இந்த படமானது அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் உருவாக்கவுள்ளது. இப்படத்தின் அறிமுக வீடியோவின் ஷூட்டிங் கடந்த 2025, ஜூன் மாதத்தில் நடந்த நிலையில், இந்த ஜூலை மாதத்தில் இறுதியில் வெளியாகும் என் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் நடிகர்கள் மற்றும் ஷூட்டிங் பற்றிய தகவல்களும் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.