Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Allu Arjun : அட்லி படத்தில் 4 வேடங்களில் நடிக்கும் அல்லு அர்ஜுன்? வெளியான தகவல்

AA22 x A06 Movie Allu Arjuns Roles : பான் இந்திய பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் அல்லு அர்ஜுன் . இவரின் நடிப்பில் AA22 x A06 என்ற படமானது, ஹாலிவுட் பட பாணியில் உருவாகிவருகிறது. இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் 4 வேடங்களில் நடிக்கிறார் என்பதைப் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது, அது குறித்துப் பார்க்கலாம்.

Allu Arjun : அட்லி படத்தில் 4 வேடங்களில் நடிக்கும் அல்லு அர்ஜுன்? வெளியான தகவல்
அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 12 Jul 2025 18:31 PM

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, தற்போது பான் இந்திய இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் இயக்குநர் அட்லீ  (Atlee). இவர் தமிழில் தளபதி விஜயை (Thalapathy Vijay) வைத்து இரு ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். அதை தொடர்ந்து இந்தி மொழியிலும் ஷாருக்கானை வைத்து ஜவான் (Jawan) என்ற படத்தை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்திருந்தார். தற்போது இந்தி மொழியைத் தொடர்ந்து, தெலுங்கிலும் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். நடிகர் அல்லு அர்ஜுனின் (Allu Arjun) 22வது திரைப்படத்தை அவர் இயக்கவுள்ளார். அல்லு அர்ஜுனின் நடிப்பில் இறுதியாக புஷ்பா 2 (Pushpa 2) திரைப்படம் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியைக் கொடுத்தது. இந்த படத்தை அடுத்ததாக நடிகர் அல்லு அர்ஜுன், அட்லியின் இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார். இப்படமானது பல்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்டு ஹாலிவுட் படம் போல உருவாக்கவுள்ளது.

மேலும் இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் (Sun Pictures) நிறுவனமானது தயாரித்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் தற்போது ஆரம்பமாகியிருக்கும் நிலையில், விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், தற்போது இப்படத்தைப் பற்றிய புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், இந்த AA22 x A06 படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் 4 வேடங்களில் (4 roles) நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : ‘தளபதி விஜய்யின் ஜன நாயகன் படம் அற்புதமாக வந்திருக்கிறது’ – தயாரிப்பாளர் கொடுத்த தகவல்!

AA22 x A06 படத்தில் 4 வேடத்தில் நடிக்கும் அல்லு அர்ஜுன் :

சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வரும் இந்த AA22 x A06 படத்தில், அல்லு அர்ஜுன் கதாநாயகனை நடித்து வருகிறார். இதில் அல்லு அர்ஜுன், தாத்தா, அப்பா மற்றும் 2 மகன்கள் வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அட்லீ இயக்கத்தில் மெர்சல் படத்தில் விஜய் தந்தை மற்றும் 2 மகன் வேடத்தில் நடித்தது போல், இந்த AA22 x A06 படத்தில் அல்லு அர்ஜுன் 4 வேடத்தில் நடிக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் முன்னணி கதாநாயகியாக நடிகை தீபிகா படுகோன் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க : லியோவில் லோகேஷ் என்னை வீணடித்துவிட்டார்.. நடிகர் சஞ்சய் தத் குற்றச்சாட்டு!

இவருடன் பிரபல நடிகைகள் மிருனாள் தாகூர், ஜான்வி கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனாவும் இப்படத்தில் இணையுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிவருகிறது. இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா நெகடிவ் ரோலில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்களானது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களும் எதுவோ வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தீபிகா படுகோன் அறிமுக வீடியோ :

AA22 x A06 படம் ரிலீஸ் எப்போது?

அல்லு அர்ஜுனின் பிரம்மாண்ட நடிப்பில் உருவாகிவரும் இந்த படத்திற்கு, இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைப்பதாகவும் தகவல்கள் வெளியாகிவருகிறது. மேலும் இப்படமானது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகிவரும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் சுமார் 1 வருடத்திற்கும் மேல் நடக்கும் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக அல்லு அர்ஜுனின் இப்படம் வரும் 2027ம் ஆண்டு வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.