Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Jana Nayagan : ‘தளபதி விஜய்யின் ஜன நாயகன் படம் அற்புதமாக வந்திருக்கிறது’ – தயாரிப்பாளர் கொடுத்த தகவல்!

Producer Suprith Expressed Opinion About Jana Nayagan : தளபதி விஜய்யின் 69வது திரைப்படமாக தயாராகிவருகிறது ஜன நாயகன். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகளில் இருந்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட, ஜன நாயகன் படத் தயாரிப்பாளர் சுப்ரித் படத்தைப் பற்றி அப்டேட் கொடுத்துள்ளார். இது மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Jana Nayagan : ‘தளபதி விஜய்யின் ஜன நாயகன் படம் அற்புதமாக வந்திருக்கிறது’ – தயாரிப்பாளர் கொடுத்த தகவல்!
தளபதி விஜய்யின் ஜன நாயகன் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 11 Jul 2025 21:21 PM

கோலிவுட் சினிமாவில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகிவரும் திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) முன்னணி நடிப்பில் இப்படம் உருவாகியிருக்கிறது. இந்த படத்தை கோலிவுட் பிரபல இயக்குநர் ஹெச். வினோத் (H. Vinoth) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே கார்த்தி முதல் அஜித் குமார் வரை முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கியிருக்கிறார். இதைத் தொடர்ந்து இயக்குநர் ஹெச். வினோத் தளபதி விஜய்யின் இறுதி படமாகக் கூறப்படும் ஜன நாயகனை இயக்கியுள்ளார். இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025, ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் நிறைவடைந்ததாகக் கூறப்படுகிறது.  அதைத் தொடர்ந்து இறுதிக்கட்ட பணிகளில் இப்படமானது இருந்து வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் கேடி என்ற திரைப்படத்தின் தமிழ் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், கேவிஎன் ப்ரொடக்ஷன் (Kvn Productions) நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுப்ரித் (Suprith) கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் ஜன நாயகன் படைத்ததை பற்றி தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் ஜன நாயகன் படமானது பிரமாதமாக வந்திருக்கிறது எனக் கூறியுள்ளார். மேலும் அவர் பேசியதை பற்றிப் பார்க்கலாம்.

இதையும் படிங்க : கார்த்தி-கல்யாணி பிரியதர்ஷன் காம்போ.. மார்ஷல் பட அப்டேட் இதோ

ஜன நாயகன் படம் குறித்து தயாரிப்பாளர் சுப்ரித் பேச்சு :

சமீபத்தில் கன்னட நடிகர் துருவா ஷார்ஜா நடிப்பில், உருவான கேடி என்ற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையின் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கேவிஎன் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பாளரான சுப்ரித் கலந்துகொண்டார். அதில் அவர் ஜன நாயகன் படத்தைப் பற்றி தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் “நாங்கள் ஜன நாயகன் படத்தை முடித்துவிட்டோம். படம் மிகவும் அற்புதமாக வந்துள்ளது. மேலும் தளபதி விஜய் சார்ந்த பிறந்தநாளில் வெளியான கிளிம்ப்ஸ் வீடியோவும் மிக பிரம்மாதமாக இருந்தது” என அவர் அதில் பேசியுள்ளார். இந்த தகவலானது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க : தனுஷ் – ராஷ்மிகா மந்தனாவின் ‘குபேரா’ – ஓடிடி ரிலீஸ் எப்போது?

ஜன நாயகன் படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ :

விஜய்யின் இந்த ஜன நாயகன் படமானது வரும் 2026 ஆண்டு ஜனவரி 09ம் தேதியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இப்படமானது இறுதிக்கட்ட வேலையிலிருந்து வரும் நிலையில், படம் மிகவும் தரமாகத் தயாராகிவருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் பாபி தியோல், நரேன், பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துவரும் நிலையில், இப்படத்தின் முதல் பாடல் பற்றிய தகவல் வெளியாகி வருகிறது. இப்படத்தின் முதல் பாடல் இயக்குநர் ஹெச். வினோத்தின் பிறந்தநாளான (05/09/2025 ) அன்று வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை.