Nayanthara: விவாகரத்து தொடர்பான வதந்தி.. ஸ்டைலாக பதிலளித்த நயன்தாரா!
Nayantharas Reaction To Divorce Rumors : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நயன்தாரா. இவர் திருமணத்திற்குப் பின்னும் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபகாலமாக, நயன்தாராவிற்கும், விக்னேஷ் சிவனுக்கும் விவாகரத்து நடக்க உள்ளதாக வதந்திகள் பரவியது. இந்நிலையில், இந்த வதந்தி குறித்து நடிகை நயன்தாரா ரியாக்ட் செய்துள்ளார்.

நடிகை நயன்தாரா (Nayanthara) தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். இவர் தமிழ் சினிமா மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். தளபதி விஜய் (Thalapathy Vijay), அஜித் குமார் (Ajith Kumar) வரை பல முன்னணி பிரபலங்களுக்கும் ஜோடியாக நடித்து அசத்தியிருக்கிறார். இந்நிலையில், நயன்தாரா கடந்த 2022ம் ஆண்டு தமிழ் பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குத் இரு ஆண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், நடிகை நயன்தாரா படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்து தனது குழந்தைகளுடனும், நேரத்தைச் செலவழித்து வருகிறார். சமீப காலமாக நயன்தாராவிற்கு மற்றும் விக்னேஷ் சிவனுக்கும் விவாகரத்து (Divorce) தொடர்பான பிரச்சனைகள் நடந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வந்தது.
இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பாணியில் ரியாக்ட் செய்துள்ளார். இந்த பதிவானது மக்கள் மத்தியில் வைரலாகி வந்தது. அந்த பதிவில் நடிகை நயன்தாரா, கணவன் விக்னேஷ் சிவனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “எங்களைப் பற்றி வரும் வதந்திகளுக்கு ரியாக்ஷன் இதுதான்” என அதில் எழுதியிருந்தார்.




நடிகை நயன்தாராவின் ரீசென்ட் போட்டோஸ் ;
View this post on Instagram
நடிகை நயன்தாராவின் புதிய திரைப்படங்கள் :
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவையும் கடந்து, கன்னடம் படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் மூக்குத்தி அம்மன் 2. இயக்குநர் சுந்தர் சி -யின் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதையும் படிங்க :சினிமா என்பது ஒரு கணிக்க முடியாத விளையாட்டு – இயக்குநர் ராம் பேச்சு!
இந்த படத்தின் ஷூட்டிங் சமீப காலமாகக் கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா, தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியின் புதிய படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகை நயன்தாரா சுமார் ரூ. 16 கோடிகள் சம்பளம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க :அது ஒரு அழகான நினைவு.. பர்ஸ்ட் லவ் குறித்து மனம் திறந்த அனுஷ்கா ஷெட்டி!
இப்படங்களை அடுத்ததாக அவர் தனது கைவசத்தில், 6 படங்களை வைத்துள்ளார். மண்ணாங்கட்டி, டாக்ஸிக், டியர் ஸ்டூடன்ட், பேட்ரியாட், ஹாய், ராக்காயி என அடுத்தடுத்த படங்களிலும் நடித்து வருகிறார். இதில் இறுதிக்கட்ட பணிகளில், டியர் ஸ்டூடன்ட், ஹாய், மற்றும் மண்ணாங்கட்டி போன்ற திரைப்படங்கள் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.