Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அட்லி படத்திற்காக மீண்டும் இணையும் நடிகர்கள் அல்லு அர்ஜுன் – ராஷ்மிகா மந்தனா?

Atlees AA22 x A6: நடிகர்கள் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து புஷ்பா பாகம் ஒன்று மற்றும் புஷ்பா பாகம் இரண்டு என இரண்டு பெரிய வெற்றிப்படங்களை கொடுத்துள்ளனர். இந்த நிலையில் இவர்கள் அடுத்ததாக அட்லியின் படத்திற்காக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அட்லி படத்திற்காக மீண்டும் இணையும் நடிகர்கள் அல்லு அர்ஜுன் – ராஷ்மிகா மந்தனா?
அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா மந்தனாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Jul 2025 20:23 PM

நடிகர் அல்லு அர்ஜுன் (Allu Arjun) தற்போது இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இது நடிகர் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கும் 22-வது படம் ஆகும் மேலும் இயக்குநர் அட்லி இயக்கும் 6-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்து வருகிறார். பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்தப் படம் ஒரு சயின்ஸ் பிக்சனை மையப்படுத்தி அமைந்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் 8-ம் தேதி 2025-ம் ஆண்டு நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டு இருந்தது.

இந்தப் படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 6 நாயகிகள் நடிக்க உள்ளதாக முன்னதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன் – அட்லி கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகை தீபிகா படுகோனே இணைந்துள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. காரணம் நடிகை தீபிகா படுகோன் பாலிவுட்டில் பலப் படங்களில் நடித்து இருந்தாலும் அவருக்கு தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களின் பட்டாளம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read… தமிழ் சினிமா நெகட்டிவ் விமர்சனங்களால் பெரிய பிரச்சனையை எதிர்கொள்கிறது – இயக்குநர் பிரேம் குமார்

AA22 x A6 குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also read… Sarathkumar : 3BHK பட வரவேற்பு… இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத்திற்கு பரிசு கொடுத்த சரத்குமார்!

மீண்டும் இணையும் அல்லு அர்ஜுன் – ராஷ்மிகா மந்தனா கூட்டணி:

இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 6 நாயகிகள் நடிக்க உள்ளதாக முன்பு சினிமா வட்டாரங்களில் வதந்திகள் பரவிய நிலையில் தற்போது இந்தப் படத்தின் மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகர் அல்லு அர்ஜுன் உடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் முன்னதாக நடித்து வெளியான புஷ்பா படத்தின் பாக ஒன்று மற்றும் பாகம் இரண்டு ஆகியவை ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.