Soubin Shahir : பணமோசடி புகாரில் ‘கூலி’ பட நடிகர் சௌபின் சாஹிர் கைது!
Soubin Shahir Arrested And Bail In Money Laundering Case : மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் சௌபின் சாஹிர். மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் இவர். இந்நிலையில், இவர் மஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பு பணமோசடி குறித்த புகாரின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் சௌபின் சாஹிர் (Soubin shahir). இவர் கடந்த 2015ம் ஆண்டு வெளியான ப்ரேமம் (Premam) என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து பல படங்களில் முக்கிய வேடத்தில் இவர் நடித்திருந்தாலும், இவருக்கு பான் இந்தியா அளவிற்குப் பிரபலத்தைப் பெற்றுக் கொடுத்த படம் மஞ்சும்மல் பாய்ஸ் (Manjummel boys). கடந்த 2024ம் ஆண்டு வெளியான இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தைத் தொடர்ந்து தமிழில், ரஜினிகாந்த்தின் கூலி (Coolie) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், பணமோசடி புகாரில் (Money laundering complaint), தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட தயாரிப்பில் , ஏற்பட்ட பணமோசடி புகாரில் நடிகர் சௌபின் சாஹிர் உட்பட மொத்தம் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் லாபத்தில் 40 சதவீதம் தருவதாகக் கூறி, வெறும் ரூ. 7 கோடி மட்டும் கொடுத்து ஏமாற்றியதாக, எர்ணாகுளம் நீதிமன்றத்தில் சிராஜ் என்பவர் புகார் அளித்துள்ளார். இந்த இந்த புகாரின் காரணமாக , மலையாள நடிகர் சௌபின் ஷாஹிர் உட்பட மொத்தம் 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.




கைது செய்யப்பட்ட சௌபின் ஷாஹிரின் நிலைமை என்ன :
பணமோசடி என்ற பெயரில் , நடிகர் சௌபின் ஷாஹிர் உட்பட 3 நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் அதைத் தொடர்ந்து இந்த வழக்கு கேரளா மாநில காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இந்த மூவரும் முன்ஜாமீன் வழங்கக் கோரி, எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.
இதையும் படிங்க :ஹேக் செய்யப்பட்டது உன்னி முகுந்தனின் இன்ஸ்டா அக்கவுண்ட்… வைரலாகும் போஸ்ட்!
அந்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதிகள், கைது செய்யப்பட்ட மூவருக்கும் முன்ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், பணமோசடி குறித்து விசாரணைக்காக மரடு காவல்நிலையத்தில் கைதுசெய்து வைக்கப்பட்டிருந்த, 3 நபர்களும் முன்ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலானது ஒட்டுமொத்த சினிமா துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கூலி திரைப்படத்தில் நடிகர் சௌபின் ஷாஹிர் :
View this post on Instagram
நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது திரைப்படம்தான் கூலி. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் நிலையில், பான் இந்திய மொழி நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர். அமீர்கான் முதல் நாகார்ஜுனா வரை பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். மேலும் மலையாள சினிமாவில் இருந்து நடிகர் சௌபின் சாஹிர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் இணைந்த நடிகர் மோகன்லால்? வைரலாகும் தகவல்