Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா… என்ன நடந்தது தெரியுமா?

Actress Rashmika Mandanna: நடிகை ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் அவ்வப்போது பேட்டிகளை அளித்து வருகிறார். அப்படி சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா அளித்தப் பேட்டியில் கொடவா சமூகத்தினர் குறித்து பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா… என்ன நடந்தது தெரியுமா?
நடிகை ராஷ்மிகா மந்தனாImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Jul 2025 21:24 PM

நடிகை ராஷ்மிகா மந்தனா (Actress Rashmika Mandanna) நாயகியாக நடித்து இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் குபேரா. இந்தப் படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கி உள்ள நிலையில் படத்தில் நடிகர் தனுஷ் (Actor Dhanush) நாயகனாக நடித்து இருந்தார். மேலும் நடிகர் நாகர்ஜுனா இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். படம் திரையரங்குகளில் கடந்த 20-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு வெளியான நிலையில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அடுத்ததாக தமா மற்றும் தி கேர்ள்ஃபிரண்ட் ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சர்ச்சையை கிளப்பிய நடிகை ராஷ்மிகா மந்தனாவில் பேச்சு:

அதன்படி நடிகை ராஷ்மிகா மந்தனா அளித்த பேட்டி ஒன்றில், நான் முதலில் நடிகையாக திரைப்படத்தில் நடித்தபோது எனது குடும்பத்தில் அதனை எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம் கூர்க் சமூகத்தில் இருந்து நடிகையாக சினிமாவில் நுழைந்தது நான் தான் என்று நினைக்கிறேன் என நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்து இருந்தார்.

ஆனால் இதற்கு பதிலளித்த கன்னடர்கள் ராஷ்மிகா மந்தனா தவறாக பேசுகிறார். அவருக்கு முன்பு கூர்க் சமூகத்தைச் சேர்ந்த பலர் திரையுலகில் நடிகர்களாக இருந்துள்ளார்கள். குறிப்பாக பிரேமா என்பவர் ஜன்னட மொழியில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்துள்ளார். மேலும் தெலுங்கு சினிமாவிலும் பலப் படங்களில் நடித்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்.

பாக்ஸ் ஆஃபிஸின் ராணியாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா:

நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தொடர்ந்து 3 படங்கள் 1000 கோடி ரூபாய்க்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்தது. அதனைத் தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனாவை ரசிகர்கள் பாக்ஸ் ஆபிஸ் குயின் என்று அழைக்கத் தொடங்கினர். ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்கள் பலரும் அவரைப் அப்படி ஆஇப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் எக்ஸ் தள பதிவு: