விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியை லாக் செய்தது படக்குழு!
KINGDOM Release Date Promo - TAMIL | நடிகர் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக திரையரங்குகளில் வெளியாகாமல் தள்ளிக்கொண்டே போனப் படம் கிங்டம். முன்னதாக மூன்று வெளியீட்டு தேதிகளை வெளியிட்டு படம் வெளியாகாமல் போனது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது முடிவு செய்துள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா (Actor Vijay Devarakonda). இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தாலும் தென்னிந்திய சினிமாவில் உள்ள ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியான படங்கள் தென்னிந்திய மொழிகளில் குறிப்பாக தமிழில் பல ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே தயாரான படம் கிங்டம். படத்தின் வெளியீட்டு தேதி முன்பு மூன்று முறை அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போய் கொண்டிருந்தது. இந்த நிலையில் கிங்டம் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு தற்போது இறுதி செய்துள்ளது. அது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக படம் இந்தப் படம் மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பின்பு சில காரணங்களால் படத்தின் வெளியிட்டை ஒத்திவைத்தது. அதனைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டை மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அப்போது நாட்டில் போர் சூழல் நிலவி வந்த நிலையில் படத்தின் வெளியீட்டை தள்ளி வைப்பதாக அறிவித்தது.




புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த கிங்டம் படக்குழு:
அதனைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டு தேதியை ஜூலை மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து இருந்தது. ஆனால் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை. இந்த நிலையில் இன்று ஜூலை மாதம் 7-ம் தேதி 2025-ம் ஆண்டு படத்தின் ரிலீஸ் ப்ரோமோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் அந்த படத்தின் ரிலீஸ் ப்ரோமோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் படத்தின் வெளியீடு வருகின்ற 31-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையாவது படத்தின் ரிலீஸ் குறித்த தேதியில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கிங்டம் படத்தின் ரிலீஸ் குறித்து விஜய் தேவரகொண்டா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#KINGDOM
July 31st. Worldwide.
Let our Destinies unfold.Telugu – https://t.co/MjWWy8EQjm
Tamil – https://t.co/MpXjpkXmTaA @gowtam19 story that unfolds like a novel to @anirudhofficial‘s genius score ❤️@vamsi84 pic.twitter.com/ebpnzUdYjZ
— Vijay Deverakonda (@TheDeverakonda) July 7, 2025