Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நடிகர் சித்தார்த்தின் 3 BHK படத்தின் 3 நாள் வசூல் இவ்வளவா? வைரலாகும் தகவல்

3 BHK Movie Box Office Collection: நடிகர் சித்தார்த் நாயகனாக நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் 3 BHK. இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படம் வெளியாகி 3 நாட்கள் முடிவடைந்த நிலையில் படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் சித்தார்த்தின் 3 BHK படத்தின் 3 நாள் வசூல் இவ்வளவா? வைரலாகும் தகவல்
3 BHKImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Jul 2025 17:11 PM

நடிகர் சித்தார்த் (Actor Siddharth) நாயகனாக நடித்து தற்போது கோலிவுட் சினிமாவில் வெளியாகியுள்ள படம் 3 BHK. இயக்குநர் ஸ்ரீ கணேஷ் எழுதி இயக்கி உள்ள இந்தப் படம் கடந்த 4-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற மிடில் கிளாஸ் குடும்பத்தின் கவனை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தில் நடிகர்கள் சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத், சைத்ரா, யோகி பாபு, சுப்பு பஞ்சு, தலைவாசல் விஜய், விவேக் பிரசன்னா, திலீபன் கிருஷ்ண மூர்த்தி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸின் கீழ் தயாரிபாளர் அருண் விஷ்வா தயாரித்து இருந்தார்.

இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் இந்தப் படத்திற்கு இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல படத்தின் வந்த பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படம் வெளியாகி 3 நாட்களை கடந்துள்ள நிலையில் படம் தற்போது வரை ரூபாய் 4.8 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

திரையரங்குகளில் வரவேற்பைப் பெறும் 3 BHK படத்தின் கதை என்ன?

நடிகர் சித்தார்த் மற்றும் அவரது அம்மா தேவயானி அப்பா சரத்குமார் மற்றும் தங்கை மீதா ரகுநாத் ஆகியோர் ஒரு வாடகை வீட்டிற்கு வருகின்றனர். கம்பெனி ஒன்றில் அக்கவுண்ட்ஸ் பார்க்கும் வேலையில் இருக்கும் சரத்குமார் மகன் சித்தார்த்தை பெரிய பள்ளியிலும் மகள் மீத்தா ரகுநாத்தை அரசுப் பள்ளியிலும் படிக்க வைக்கிறார்.

மகன் சித்தார்த் படித்து தங்களது குடும்பத்தை காப்பாற்றிவிடுவார் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார் சரத்குமார். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் சித்தார்த்தால் நன்கு படிக்க முடியவில்லை. ஒரு வழியாக கஷ்டப்பட்டு 12-ம் வகுப்பை முடித்த சித்தார்த் கல்லூரியில் மெக்கானிக்கல் எஞ்சினியராக நினைக்கிறார்.

ஆனால் கல்லூரி பிரின்சிபலின் பேச்சைக் கேட்டு சித்தார்த்தின் அப்பா சரத்குமார் அவரை ஐடி படிப்பில் சேர்த்துவிடுகிறார். மிகவும் கஷ்டப்பட்டு தனது கல்லூரி படிப்பை முடிக்கும் சித்தார்த் வேலை கிடைக்காமல் சுற்றி வருகிறார். கல்லூரி முடித்து பல ஆண்டுகளுக்குப் பிறகு வேலைக்கு சேறும் சித்தார்த்திற்கு அந்த வேலை ஒரு கட்டத்தில் பிடிக்காமல் போய்விடுகின்றது.

இதற்கு இடையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற சரத்குமாரின் கனவும் தொடந்து தடைப்பட்டுக்கொண்டே வருகின்றது. இறுதியில் இவர்கள் சொந்த வீடு வாங்கினார்களா சித்தார்த் தனது வாழ்க்கையில் வெற்றியடைந்தாரா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

3 BHK படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: