Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகும் நானியின் கோர்ட் பட நடிகை!

Actress Sridevi Apalla: நடிகர் நானியின் தயாரிப்பில் கடந்த மார்ச் மாதம் 2025-ம் ஆண்டு 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படம் கோர்ட் ஸ்டேட் vs எ நோபடி. இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை ஸ்ரீதேவி அப்பல்லா தற்போது தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகும் நானியின் கோர்ட் பட நடிகை!
ஸ்ரீதேவி அப்பல்லா, கேஜேஆர்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Jul 2025 15:24 PM

தெலுங்கு சினிமாவில் நடிகர் நானியின் (Actor Nani) தயாரிப்பில் இயக்குநர் ராம் ஜகதீஷ் எழுதி இயக்கிய படம் கோர்ட்: ஸ்டேட் vs எ நோபடி. இந்தப் படத்தின் மூலம் இவர் இயக்குநராக சினிமாவில் அறிமுகம் ஆகியது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர்கள் பிரியதர்ஷி புலிகொண்டா, பி.சாய் குமார், சிவாஜி, ரோகினி, ஹர்ஷ வர்தன், சுபலேகா சுதாகர், ஹர்ஷ் ரோஷன் மற்றும் ஸ்ரீதேவி (Actress Sridevi Apalla) ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். கோர்ட் ட்ராமாவாக தெலுங்கு மொழியில் உருவான இந்தப் படம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியானது. திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

18 வயதிற்கு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை விசாரிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட போக்சோ சட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்துவதை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகும் ஸ்ரீதேவி அப்பல்லா:

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி அப்பல்லா. இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நாயகியாக அறிமுகம் ஆக உள்ளார். பிரபல தயாரிப்பாளர் கேஜேஆர் உடன் இணைந்து நடிகை ஸ்ரீதேவி அப்பல்லா நடிக்க உள்ளார். இந்தப் படம் கேஜேஆர் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை இயக்குநர் ரீகன் ஸ்டானிஸ்லாஸ் எழுதி இயக்க உள்ள நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க உள்ளார். தெலுங்கில் ஹிட் படத்தில் நடித்த ஸ்ரீதேவி அப்பல்லாவிற்கு தமிழில் அறிமுகம் ஆகும் இந்தப் படமும் வெற்றியைத் தரும் என்று ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். மேலும் இந்தப் படத்தின் பூஜை தொடர்பான படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இணையத்தில் கவனம் பெரும் ஸ்ரீதேவி அப்பல்லா மற்றும் கேஜேஆர் படத்தின் பூஜை படங்கள்: