Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

14 ஆண்டுகளை நிறைவு செய்தது தனுஷ் – தமன்னா நடிப்பில் ஹிட் அடித்த வேங்கை படம்!

Venghai Movie: நடிகர்கள் தனுஷ் மற்றும் தமன்னா இணைந்து தமிழ் சினிமாவில் பல ஹி படங்களை கொடுத்துள்ளனர். அவர்கள் இணைந்து நடித்த படங்களில் வேங்கை படமும் ஒன்று. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

14 ஆண்டுகளை நிறைவு செய்தது தனுஷ் – தமன்னா நடிப்பில் ஹிட் அடித்த வேங்கை படம்!
வேங்கை படம்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 07 Jul 2025 16:30 PM

இயக்குநர் ஹரி (Director Hari) எழுதி இயக்கிய படம் வேங்கை. கடந்த 7-ம் தேதி ஜூலை மாதம் 2011-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் இன்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்கின்றது. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் (Actor Dhanush) நாயகனாக நடிக்க நடிகை தமன்னா பாட்டியா நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், கஞ்சா கருப்பு, ஊர்வசி, ஸ்ரீதிகா, நிழல்கள் ரவி, சுதா சந்திரன், லிவிங்ஸ்டன், பறவை முனியம்மா, சார்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரமேஷ் கண்ணா மற்றும் பொன்னம்பலம் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். தயாரிப்பாளர் வெங்கடராம ரெட்டி தயாரித்த இந்த வேங்கை படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார்.

முழுக்க முழுக்க ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து ஆக்‌ஷன் படமாக உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

தனுஷின் நடிப்பில் ஹிட் அடித்த வேங்கை படத்தின் கதை என்ன?

ஊரில் அடிதடி என்று சுற்றித் திரியும் தனது மகன் தனுஷ் நல்ல வழிக்கு வரவேண்டும் என்று தனது தம்பியிக் கடைக்கு வேலைக்கு அனுப்புகிறார் ராஜ்கிரண். அங்கு வேலைக்கு சென்ற இடத்தில் நடிகை தமன்னாவைப் பார்த்ததும் அவர் மீது காதலில் விழுகிறார் தனுஷ். அவரை துரத்தி துரத்தி காதலித்ததில் தமன்னாவிற்கும் தனுஷ் மீது காதல் ஏற்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து தனுஷ் தனது குடும்பத்தினரிடம் தமன்னாவை அறிமுகம் செய்து வைக்கிறார். ஆனால் தமன்னாவின் தந்தை இறந்ததற்கு ராஜ்கிரன் தான் காரணம் என்றும் அவரைப் பழிவாங்க வேண்டும் என்று தமன்னாவின் குடும்பத்தினர் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தமன்னா தனது காதலை தேர்ந்தெடுத்தாரா அல்லது தந்தையின் மரணத்திற்கு பழி வாங்கினாரா என்பதே படத்தின் கதை.

இது ஒருபுறம் இருக்க படத்தில் எம்.எல்.ஏவாக இருக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ் ராஜ்கிரணை பழிவாங்க ஒருபுறம் திட்டம் தீட்டி வருகிறார். இந்த சிக்கல்களில் எல்லாம் இருந்து தனது தந்தை ராஜ்கிரணை தனுஷ் எப்படி காப்பாற்றினார். மேலும் தமான்னா மற்றும் தனுஷ் இடையே இருந்த காதல் ஜெயித்ததா என்பதே படத்தின் கதை.

தனுஷ் நடிப்பில் அடுத்தாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம்:

பான் இந்திய அளவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் குபேரா படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது தனுஷ் இயக்கி நாயகனாக நடித்துள்ள இட்லி கடை படம் வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.

இட்லி கடை படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: