Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஓஹோ எந்தன் பேபி படத்தைப் பார்த்து பாராட்டிய அமீர் கான் – விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி

Oho Enthan Baby: நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா தமிழ் சினிமாவில் தற்போது நாயகனாக அறிமுகம் ஆக உள்ள படம் ஓஹோ எந்தன் பேபி. இந்தப் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.

ஓஹோ எந்தன் பேபி படத்தைப் பார்த்து பாராட்டிய அமீர் கான் – விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி
அமீர் கான் Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Jul 2025 15:50 PM

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால் (Actor Vishnu vishal). இவரது தம்பி ருத்ரா தமிழ் சினிமாவில் தற்போது நாயகனாக அறிமுகம் ஆக உள்ள படம் ஓஹோ எந்தன் பேபி. படம் வருகின்ற 11-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு பங்கேற்று வருகின்றது. அப்படி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது தம்பி ருத்ரா ஆகியோர் ஓஹோ எந்தன் பேபி என்ற இந்தப் படத்தை பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் (Aamir Khan) பார்த்துவிட்டு வெகுவாகப் பாராட்டியதாக தெரிவித்துள்ளனர். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தப் பெற்று வருகின்றது.

ஓஹோ எந்தன் பேபி படத்தைப் பாராட்டிய அமீர் கான்:

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா குட்டா தம்பதிகளுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இவர்களின் குடும்ப நண்பரான நடிகர் அமீர் கான் அந்த குழந்தைக்கு மிரா என்று பெயர் சூட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் நடிகர் அமீர் கான் ஓஹோ எந்தன் பேபி படத்தைப் பார்த்துவிட்டு என்ன சொன்னார் என்பது குறித்து விஷ்ணு விஷால் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதன்படி நடிகர் அமீர் கான் இந்த ஓஹோ எந்தன் பேபி படத்தை பார்த்துவிட்டதாகவும், அதில் இரண்டாம் பாதியில் அவர் கண்கலங்கியதாகவும் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். தொடர்ந்து படம் முடிந்ததும் நடிகர் அமீர் கான் படம் சிறப்பாக இருந்தது என்றும் இப்படியான உறவுகளை மையப்படுத்திய படங்கள் தற்போது அதிக அளவில் வரவில்லை என்று அமீர் கான் பாராட்டியதாகவும் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

இணையத்தில் வைரலாகும் நடிகர் விஷ்ணு விஷாலின் பேச்சு:

தனது தம்பி ருத்ராவை நாயகனாக அறிமுகப்படுத்தும் விஷ்ணு விஷால்:

சினிமாவில் நல்ல நிலையில் இருப்பவர்கள் தொடர்ந்து தங்களது குடுப்பத்தில் இருப்பவர்களை அறிமுகம் செய்வது வழக்கமான ஒன்றாகவே இருக்கிறது. அந்த வகையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது தம்பி ருத்ராவை நாயகனாக அறிமுகம் ஆக்கியுள்ளார். இந்தப் படத்தை விஷ்ணு விஷால் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இதில் நடிகர் விஷ்ணு விஷால் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.