Priyamani : அந்த ஹாலிவுட் வெப் தொடரின் ரீமேக்கில் நடிக்க ஆசை.. நடிகை பிரியாமணி பேச்சு!
Priyamani About Money Heist Web Series : தென்னிந்தியப் பிரபல நடிகைகளில் ஒருவர்தான் பிரியாமணி. இவர் தமிழ் , தெலுங்கு, மலையாள என பல்வேறு மொழி படங்களில் முன்னணி நடிகையாக நடித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், மணி ஹெய்ஸ்ட் தொடர் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஆசை இருப்பதாகப் பேசியுள்ளார்.

நடிகை பிரியாமணி (Priyamani) தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம்வந்தார். தற்போது திரைப்படங்களில் முக்கிய வேடங்கள் மற்றும் சிறப்புக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான வெப் தொடர் குட் வைப் (Good Wife). இந்த வெப் தொடரை ரேவதி (Revathy) என்பவர் இயக்கியுள்ளார். இந்த வெப் தொடரில் நடிகை பிரியாமணி வழக்கறிஞர் (Lawyar) கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரைம் திரில்லர் கதைக்களத்துடன் கூடிய தொடராக அமைந்துள்ளது. இந்த வெப் தொடரை அடுத்ததாக நடிகை பிரியாமணியின் நடிப்பில் உருவாகியிருக்கும் பட ஜன நாயகன் (Jana Nayagan) . தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) கடைசி திரைப்படம் என கூறப்படும் இப்படத்தில், நடிகை பிரியாமணி மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றியும் நடிகை பிரியாமணி பல நேர்காணலில் பகிர்ந்துள்ளார். மேலும் நடிகை சமீபத்தில் பேசிய நேர்காணல் ஒன்றில், தான் ஹாலிவுட் மணிஹெய்ஸ்ட் (Money Heist) வெப் தொடரின், தமிழ் ரீமேக்கில் நடிப்பதற்கு ஆசைப்படுவதாகப் பேசியுள்ளார். அவர் என்ன பேசினார் என்பதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.




நடிகை பிரியாமணி தமிழ் ரீமேக் வெப் தொடரில் நடிப்பது குறித்து பேச்சு :
நடிகை பிரியாமணி குட் வைப் வெப் தொடரின் ரிலீஸை தொடர்ந்து, அதை ப்ரோமோஷன் செய்யும் விதத்தில் பல நேர்காணல்களில் கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய பிரியாமணி, மணிஹெய்ஸ்ட் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஆசை இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க :பேச்சுலர் பட இயக்குநருடன் இணையும் நடிகர் விஷ்ணு விஷால்!
நடிகை பிரியாமணி அந்த நேர்காணலில், “எனக்கு மணிஹெய்ஸ்ட் வெப் தொடரின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஆசை அதிகம். ஏற்கனவே ஜவான் படத்தில் தனது கதாபாத்திரம் மணி ஹெய்ஸ்ட் ரீமேக் போல இருந்ததாகப் பலரும் விமர்சனம் செய்தனர். ஒருவேளை மணி ஹெய்ஸ்ட் தொடரின் தமிழ் ரீமேக்கில் நடிப்பதற்கு வாய்ப்புகள் இருந்தால், நிச்சயம் டோக்கியோ அல்லது லிஸ்பன் கதாபாத்திரங்களில் நடிக்க ஆரவமாக இருப்பதாக” நடிகை பிரியாமணி ஓபனாக பேசியிருந்தார்.
இதையும் படிங்க :தமிழ் சினிமா நெகட்டிவ் விமர்சனங்களால் பெரிய பிரச்சனையை எதிர்கொள்கிறது – இயக்குநர் பிரேம் குமார்
பிரியாமணியின் இன்ஸ்டாகிராம் லேட்டஸ்ட் போட்டோஷூட் :
View this post on Instagram
நடிகை பிரியாமணியின் நடிப்பில் தமிழ் ஜன நாயகன் படமானது உருவாகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட வேலைகளிலிருந்து வருகிறது. இந்த படமானது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 09ம் தேதியில் பொங்கல் பாண்டியை முன்னிட்டு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.