Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Priyamani : விஜய் சாரின் ரசிகை.. அவர் சினிமாவை விட்டுப் போகக்கூடாது – நடிகை பிரியாமணி பேச்சு!

Priyamanis Comments On Vijays Departure From Cinema : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தளபதி விஜய். இவர் இறுதியாக ஜன நாயகன் படத்தில் நடித்திருக்கும் நிலையில், அதைத் தொடர்ந்த முழுவதும் அரசியலில் இறங்கவுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் பேசிய நடிகை பிரியாமணி, விஜய் சாரின் ரசிகையாக நான் அவர் சினிமாவை விட்டு விலகுவதை விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.

Priyamani : விஜய் சாரின் ரசிகை.. அவர் சினிமாவை விட்டுப் போகக்கூடாது – நடிகை பிரியாமணி பேச்சு!
தளபதி விஜய் மற்றும் பிரியாமணி Image Source: Instagram
barath-murugan
Barath Murugan | Published: 04 Jul 2025 17:28 PM

நடிகை பிரியாமணி (Priyamani) தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தமிழிலும் “கண்களால் கைது செய்” (Kangalal Kaithu Sei)  என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். முதல் படம் அவருக்கு அந்த அளவிற்கு வரவேற்பைக் கொடுக்காவிட்டாலும். அடுத்தடுத்த படங்களில் மிகவும் பிரபலமாகத் தொடங்கினர். இவருக்குத் தமிழில் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது பருத்திவீரன் (Paruthiveeran) . நடிகர் கார்த்தியுடன் ( Karthi) இணைந்து அந்த படத்தில் நடித்திருந்தார். இவரின் நடிப்பில் கடந்த சில வருடங்களாக எந்த படங்களும் தமிழில் வெளியாகவில்லை. இவரின் நடிப்பில் இறுதியாகத் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படமான கஸ்டடி படம் வெளியாகியிருந்தது. இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நடிகை பிரியாமணி முக்கிய வேடத்தை நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து தற்போது விஜய்யின் (Vijay) , ஜன நாயகன் (Jana Nayagan) படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தளபதி விஜய்யின் இறுதி திரைப்படம் என்பதால் இப்படத்தின் மீது ஆர்வமும் அதிகரித்து வருகிறது. மேலும் நடிகை பிரியாமணியின் நடிப்பில் குட் வைஃப் (Good Wife) என்ற வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட பிரியாமணி,”ஜன நாயகன் படத்தில் நடித்து குறித்தும், தளபதி விஜய்யின் ரசிகையாக அவர் சினிமாவில் இருந்து விலகுவதை விரும்பவில்லை எனவும் பேசியுள்ளார்.

நடிகை பிரியாமணியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் :

 

View this post on Instagram

 

A post shared by Priya Mani Raj (@pillumani)

தளபதி விஜயை பற்றிப் பேசிய பிரியாமணி :

அந்த நேர்காணலில் நடிகை பிரியாமணியிடம், தளபதி விஜய்யின் இறுதி திரைப்படமாகக் கூறப்படும் ஜன நாயகன் படத்தில் நீங்கள் நடித்திருக்கிறீர்கள், அதிக பற்றிக் கூறுங்கள் என்று கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த பிரியாமணி, “நான் ஜன நாயகன் படத்தில் ஒரு அங்கமாக இருந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சிதான். ஏனென்றால் நான் எப்போதும் விஜய் சாரின் ரசிக்கத்தான். இந்நிலையில் இயக்குநர் ஹெச். வினோத் சார் எனக்குக் கால் பண்ணி, இந்த மாதிரி விஜய் சாருடன் படம் பண்ணிட்டு இருக்கிறேன், அதில் நீங்களும் நடிக்கவேண்டும் என்று கூறியபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன், இதை நான் எல்லா இடங்களிலும் கூறியிருக்கிறேன்” எனப் பேசினார்.

மேலும் தொகுப்பாளர், “இப்படம் விஜய் சாரின் இறுதி படம் என்று கூறுகிறார்கள், அதைப்பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள் “என்று கேட்டார். அதற்கு நடிகை பிரியாமணி, “அப்படி இருக்காது என நம்புகிறேன். ஏனென்றால் நான் விஜய் சாரின் பெரும் ரசிகை. அவர் சினிமாவில் இருந்து விலகுவதை நான் ஒருபோது விரும்பமாட்டேன். நாங்கள் எப்போது அவர் சினிமாவில் கேமராவின் முன் நடிக்கவேண்டும் என்பதைத்தான் விரும்புகிறோம். இவ்வளவு வருடமாக சினிமாவில் பார்த்த ஒருத்தர் சினிமாவில் இருந்து விலகுவதை யாரும் விரும்பமாட்டார்கள், அதனால் நான் விஜய் சார் சினிமாவில் நடிக்கவேண்டும் என நான் விரும்புகிறேன். ஆனால் அவர் விலகவேண்டும் என்று நினைத்தது அவரின் முடிவு, அவர் வேறு காரணத்திற்காகச் செல்கிறார் அது நிச்சயம் நடக்கும்” என நடிகை பிரியாமணி பேசியுள்ளார். தற்போது தளபதி விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிற்து.