Soori: ‘3BHK மற்றும் பறந்து போ’ திரைப்பட குழுக்களை வாழ்த்திய சூரி!
Soori Congratulate 3BHK And Paranthu Po Movies : தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சூரி. இவர் தற்போது படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் 3BHK மற்றும் பறந்து போ படக்குழுக்களை வாழ்த்தி எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சூரியின் (Soori) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மாமன் (Maaman). இந்த படத்தை இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். குடும்ப கதைக்களத்துடன் பாசப் போராட்ட திரைப்படமாக இப்படம் அமைந்திருந்தது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். இப்படமானது எதிர்பார்த்ததை விடவும் அதிக வரவேற்பைப் பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்திருந்தது. இந்த படத்தை அடுத்ததாக இயக்குநர் புகழேந்தி மதிமாறன் (Pugazhenthi Mathimaran) இயக்கத்தில் மண்டாடி (Mandaadi) என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் சூரி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் (Sri Ganesh) இயக்கத்தில் வெளியான 3BHK திரைப்படத்தையும், இயக்குநர் ராம் (Ram) இயக்கத்தில் வெளியான பறந்து போ (Paranthu po) திரைப்பட குழுக்களையும் இணைந்து வாழ்த்தியுள்ளார்.
இது தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் சூரி அந்த பதிவு இரு படக்குழுக்களையும் இணைந்து வாழ்ந்திருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது.




3BHK மற்றும் பறந்து போ படக்குழுக்களை வாழ்த்திய சூரி வெளியிட்ட பதிவு :
இன்று வெளியாகும் இந்த இரண்டு அற்புதமான திரைப்படங்கள் ஒவ்வொரு குடும்பத்தின் இதயத்தையும் தொடும்! ❤️🙏💐#Paradhupo : அப்பா-மகன் இடையேயான ஆழமான பாசப்பிணைப்பையும், உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் ஒரு நெகிழ்ச்சியான பயணத்தையும் உயிரோட்டமாக சித்தரிக்கும்.#3BHK : ஒரு குடும்பத்தின் கனவு… pic.twitter.com/CU8JtRxABg
— Actor Soori (@sooriofficial) July 4, 2025
இந்த பதிவில் நடிகர் சூரி, “இன்று 2025, ஜூலை 4ம் தேதி வெளியாகியிருக்கும் இந்த இரண்டு திரைப்படங்களும் ஒவ்வொரு குடும்பத்தின் இதயத்தையும் தொடும், பறந்து போ திரைப்படமானது அப்பா மற்றும் மகனுக்கு இடையேயான அழகான பாசப் போராட்டம் மற்றும் உணர்வுப்பூர்வமான நெகிழ்ச்சியான பயணத்தையும் சித்தரிக்கும்.
மேலும் இந்த 3BHK படமானது ஒரு குடும்பம் தங்களின் கனவு இல்லத்தை அடையும் உணர்ச்சிகரமான கதைக்களத்துடன் உருவாகியிருக்கிறது. மேலும் இந்த இரு திரைப்படங்களும் காதல், மகிழ்ச்சி மாறும் வாழ்க்கையின் உண்மையான தருணங்களால் மெய்சிலிர்க்க வைக்கும் என்று கூறியுள்ளார். மேலும் இயக்குநர் ராம் மாறும் ஸ்ரீ கணேஷையும் வாழ்த்தியுள்ளார். மேலும், இந்த இரு படங்களும் உணர்வுப்பூர்வமான திரைப்படங்கள், வெற்றி பெறுவதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும்” நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
பறந்து போ திரைப்படம் :
இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா மற்றும் அஞ்சலி முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் படம்தான் “பறந்து போ”. இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் வெளியாகியுள்ளது. அப்பா மற்றும் மகனுக்கு இடையேயான பந்தம் மற்றும் உணர்வுப்பூர்வமான திரைப்படமாக இப்படம் இன்று 2025, ஜூலை 4ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
3BHK திரைப்படம்
நடிகர்கள் சித்தார்த், சரத்குமார், தேவயானி மற்றும் மீத்தா ரகுநாத்தின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் படம்தான் இந்த 3BHK. இப்படத்தை இயக்குநர் ஸ்ரீ கநே இயக்கியுள்ளார். ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம் தங்களின் கனவு இல்லத்தை வாங்குவதற்குப் படும் கஷ்டங்கள் குறித்து இப்படம் உருவாகியுள்ளது. இப்படமும் இன்று 2025, ஜூலை 4ம் தேதியில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.