Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் படத்தை பாராட்டி தள்ளிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்!

நடிகர் விக்ரம் பிரபுவின் நடிப்பில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான படம் லவ் மேரேஜ். முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் படத்தை பாராட்டி தள்ளிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்!
ஆதிக் ரவிச்சந்திரன்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 03 Jul 2025 16:37 PM

நடிகர் விக்ரம் பிரபு (Actor Vikram Prabhu) நடிப்பில் தமிழில் கடந்த 27-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் லவ் மேரேஜ். முழுக்க முழுக்க ஃபேமிலி செண்டிமெண்ட். காதல் மற்றும் காமெடியை மையமாக வைத்து உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் ஷண்முகப் பிரியன் எழுதி இயக்கி உள்ளார். இவர் இந்த லவ் மேரேஜ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடிகை சுஷ்மிதா பட் (Sushmitha Bhat) நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், கஜராஜ், அருள் தாஸ், வெற்றியாளர் ராமச்சந்திரன், கோடாங்கி வடிவேலு, முருகானந்தம், யாசர் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

விக்ரம் பிரபுவின் திருமணத்திற்காக நீண்ட நாட்களாக பெண் தேடி அழைகின்றனர் அவரது குடும்பத்தினர். எல்லா வரன்களும் ஏதோ ஒரு வகையில் தட்டிப்போக இறுதியில் அவரது திருமணம் நடைப்பெற்றதா இல்லையா அல்லது திருமணம் நடைப்பெற்றால் எப்படி நடந்தது என்பதே படத்தின் கதை.

லவ் மேரேஜ் படத்தைப் பாராட்டிய ஆதிக் ரவிச்சந்திரன்:

இந்த நிலையில் இந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் வெகுவாகப் பாராட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் படதிவில் அவர் கூறியுள்ளதாவது, லவ் மேரேஜ் படம் பார்த்து மகிழ்ந்தேன். அருமையான, புதுமையான நடிப்பு விக்ரம் பிரபு சார். நகைச்சுவை, உணர்ச்சிகரமான காட்சிகள் நேர்த்தியாக செய்யப்பட்டிருந்தாலும் சரி, 90களில் பிறந்த என்னைப் போன்றவர்கள் இந்த கதாபாத்திரத்துடன் ஒத்துபோவார்கள் என்று தெரிவித்து இருந்தார்.

சிறந்த எழுத்து மற்றும் மிகச் சிறப்பாக செயல்படுத்திய இயக்குநர் ஷண்முகப் பிரியன் அண்ணா அவர்களுக்கும், இந்தப் படத்தின் பெரிய தூணாக இருந்தார் ஷான் ரோல்டன் சார். பாடல்கள் & பின்னணி இசை அருமை. இந்த சூப்பர் ஹிட் குடும்ப பொழுதுபோக்கு படத்தை உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில் பாருங்கள் என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

லவ் மேரேஜ் படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: