வெற்றிமாறன் – சிம்பு படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகர் மணிகண்டன்? வைரலாகும் தகவல்
Actor Manikandan: கோலிவுட் சினிமாவில் தற்போது முக்கிய செய்திகளில் இடம் பிடித்து வருவது நடிகர் சிம்பு இயக்குநர் வெற்றிமாறன் உடன் கூட்டணி வைத்ததுதான். இந்த கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்தில் நடிகர் மணிகண்டன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

தற்போது கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் படத்தின் செய்திகள் வெற்றிமாறன் (Director Vetrimaaran) மற்றும் சிம்பு (Actor Simbu) கூட்டணியில் உருவாகும் படத்தின் அப்டேட்கள் தான். தொடர்ந்து படம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்தப் படம் வடசென்னையை மையமாக வைத்து உருவாக உள்ளதால் முன்னதாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில் நடித்த நடிகர்களும் அந்தப் படத்தில் காட்டப்படும் காலத்தில் இந்தப் அப்டத்தின் கதையும் நடக்கும் என்பதால் இது வெற்றிமாறனின் சினிமாட்டிக் யூனிவர்ஸாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது அனைத்தும் படம் வெளியானால் மட்டுமே தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வெற்றிமாறன் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாக உள்ள இந்தப் படத்தில் நடிகர் மணிகண்டன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவர் இந்தப் படத்திற்கும் வட சென்னை படத்திற்கும் கனெக்ஷனான ஒரு கதாப்பாத்திரமாக இருப்பார் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
வெற்றிமாறன் – சிம்பு படத்தில் மணிகண்டன் இருப்பதாக வைரலாகும் தகவல்:
Actor #Manikandan is likely playing a pivotal role in #SilambarasanTR‘s STR49, Directed by VetriMaaran 🌟
Manikandan’s character is said to have a connection between #STR49 & #Vadachannai franchise🔥🔥 pic.twitter.com/JmfDXQ3aoO
— AmuthaBharathi (@CinemaWithAB) July 3, 2025
நடிகர் மணிகண்டன் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் குடும்பஸ்தன். மிடில் கிளாஸ் குடும்பத்தில் வாழும் நடிகர் மணிகண்டன் திருமணத்திற்கு பிறகு தனது குடும்பத்தையும் மனைவியையும் எப்படி பார்த்துக்கொள்கிறார் என்பதே கதை. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியான போதே படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது.
படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. முன்னதாக இவரது எதார்த்தமான நடிப்பில் வெளியான லவ்வர் மற்றும் குட் நைட் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. நடிகர் மணிகண்டன் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டும் இன்றி திரைக்கதை ஆசிரியராகவும், வசனகர்த்தாவுமாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.
நடிகர் மணிகண்டனின் வசனத்தில் வெளியான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவரின் அடுத்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.