Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

3 BHK படத்தைப் பாராட்டிய பறந்து போ பட நடிகை அஞ்சலி!

Actresss Anjali: நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் 3 BHK. இந்தப் படத்தை திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பு சிறப்பு திரையிடலில் பார்த்த பிரபலங்களும் விமர்சகர்களும் தங்களது விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை அஞ்சலியும் தனது விமர்சனத்தை தற்போது தெரிவித்துள்ளார்.

3 BHK படத்தைப் பாராட்டிய பறந்து போ பட நடிகை அஞ்சலி!
நடிகை அஞ்சலிImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 03 Jul 2025 13:30 PM

தமிழ் சினிமாவில் இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை அஞ்சலி. இவர் தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நடிகை அஞ்சலி அவ்வப்போது தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது நடிகை அஞ்சலி இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள பறந்து போ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் சிவா நாயகனாக நடித்துள்ள நிலையில் நடிகை அஞ்சலி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நடிகை அஞ்சலியின் எதார்த்தமான நடிப்பிற்கு தமிழ் சினிமாவில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம் என்றே சொல்லலாம். இந்த நிலையில் நடிகை அஞ்சலி நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள 3 BHK படத்தைப் பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள 3 BHK படம் நாளை ஜூலை மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சரத்குமார், யோகிபாபு, தேவயானி, மீத்தா ஸ்ரீநாத், சைத்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும் நடிகை அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள பறந்து போ படமும் நாளை ஜூலை மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் நடிகை அஞ்சலி 3 BHK படம் குறித்து வெளியிட்ட எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் நடிகை அஞ்சலி கூறியதாவது, தற்போதுதான் 3 BHK படம் பார்த்தேன்.

3 BHK படம் குறித்து நடிகை அஞ்சலி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

அமைதியான, ஆழமாக உணரப்பட்ட படம், உங்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும். மீண்டும் ஒரு சிறந்த நடிப்பிற்காக நடிகர்கள் சித்தார்த் மற்றும் சரத்குமார் அவர்களுக்கு ஒரு பெரிய கைதட்டல். இவ்வளவு உணர்வுப்பூர்வமான படத்தை தயாரிக்க தேர்ந்தெடுத்ததற்காக தயாரிப்பாளர் அருண் விஸ்வாவிற்கு வாழ்த்துகள்.

மேலும் இந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் ஸ்ரீ கணேஷிற்கு பாராட்டுகள். மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் படம் வெற்றிபெற வாழ்த்துகள் என்று நடிகை அஞ்சலி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.