சத்தமே இல்லாமல் ஓடிடியில் வெளியானது கமல் ஹாசனின் தக் லைஃப் படம்
Thug Life Movie: நடிகர் கமல் ஹாசனின் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான படம் தக் லைஃப். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் எந்தவித அறிவிப்பும் இன்றி படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது.

உலக நாயகன் கமல் ஹாசன் (Actor Kamal Haasan) நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் மணிரத்னம் (Director Maniratnam) இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. காரணம் நாயகன் படத்தை தொடர்ந்து சுமார் 38 ஆண்டுகளுக்கு பிறகு கமல் ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணி அமைந்ததுதா. இந்தப் படத்தில் நடிகர் சிம்புவும் நாயகனாக நடித்து இருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே தோல்வியை சந்தித்தது. இந்தப் படத்தில் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் சிம்பு உடன் இணைந்து நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ், அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக இருந்த இந்தப் படம் கன்னட மொழியில் மட்டும் வெளியாகவில்லை. கமல் ஹாசன் கன்னட மொழி குறித்த சர்ச்சையான கருத்தை கூறியதால் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி கர்நாடகாவில் இந்தப் படம் வெளியாகாமலே போனது.




தல் லைஃப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்ட பதிவு:
It is a battle between Death and Rangaraya Sakthivel, want to see who wins the game? 😎🔥
Watch Thug Life, now on Netflix in Tamil, Hindi, Telugu, Kannada and Malayalam#ThugLifeOnNetflix pic.twitter.com/kdmrPqjQ6A— Netflix India (@NetflixIndia) July 3, 2025
சத்தமே இல்லாமல் ஓடிடியில் வெளியான தக் லைஃப்:
தக் லைஃப் படத்தின் திரையரங்க வெளியீட்டிற்கு முன்னதாகவே கமல் ஹாசன் படம் 8 வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் என்று அறிவித்து இருந்தார். அப்படி அவர் அறிவிக்க காரணம் தென்னிந்திய மொழிகளில் பெரும்பாளான படங்கள் 4 வாரங்களிலேயே ஓடிடியில் வெளியாகிவிடும். அந்தப் படம் வரவேற்பைப் பெற்றாலும் இல்லை என்றாலும் படம் ஓடிடியில் வெளியாகிவிடும்.
இதன் காரணமாக இந்தி திரையுலகில் பெரும்பாலான தென்னிந்திய படங்களுக்கு திரையரங்குகள் அதிகமாக கிடைக்காது. இதனை கருத்தில் கொண்ட கமல் ஹாசன் இந்தி திரையுலகில் அதிக திரையரங்குகளில் தக் லைஃப் படம் வெளியாக வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த முடிவை எடுத்து இருந்தார்.
ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதன் காரணமாக 8 வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாக வேண்டிய தக் லைஃப் படம் 4 வாரங்களின் முடிவிலேயே தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓஃபிஃபியில் வெளியானது. இது தொடர்பான அறிவிப்பை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.