AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பான் இந்திய படங்கள் குறித்து வெளிப்படையாக பேசிய நாகர்ஜுனா

Actor Nagarjuna: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் நாகர்ஜுனா. இவர் தெலுங்கில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பிரபல நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் குபேரா படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேறபைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பான் இந்திய படங்கள் குறித்து வெளிப்படையாக பேசிய நாகர்ஜுனா
நாகர்ஜுனாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Jul 2025 16:03 PM IST

நடிகர் நாகர்ஜுனா (Actor Nagarjuna) தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழில் குறைந்த அளவிலான படங்களில் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்களின் பட்டாளம் அதிகம். இந்த நிலையில் சமீபத்தில் இவர் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்த குபேரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவான இந்தப் படம் பான் இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாறாக கலவையான விமர்சனத்தையேப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடித்த நாகர்ஜுனா பான் இந்திய மொழிப் படங்கள் குறித்து பேசியது தற்போது வைரலாகு வருகின்றது.

அனைத்து படங்களும் பான் இந்திய படங்களாக முடியாது:

நடிகர் நாகர்ஜுனா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசியது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதில் அவர் கூறியதாவது, கொரோனா காலத்திற்கு பிறகு ஓடிடியின் ஆதிக்கம் மக்களிடையே அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக மற்ற மொழி படங்களை மக்கள் அதிகம் பார்க்கின்றனர்.

இந்த மாற்றம் வரவேற்கத்தக்க மாற்றம் தான். ஆனால் வெளியாகும் அனைத்துப் படங்களும் பான் இந்திய படமாக மாறாது. பான் இந்திய படமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு என சில முன்னேற்பாடுகள் இருக்கின்றது. சரியான திட்டமிடல் உடன் படத்தின் கதை மிகவும் வலிமையானதாக இருந்தால் மட்டுமே அது பான் இந்திய படமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

குபேரா படம் குறித்து நாகர்ஜுனாவின் எக்ஸ் தள பதிவு:

தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்கும் நடிகர் நாகர்ஜுனா:

நடிகர் நாகர்ஜுனா தமிழில் தற்போது நடிகர் தனுஷின் குபேரா படத்தின் மூலம் ரசிகர்களிடையே தோன்றினார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள கூலி படத்தின் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.

ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த கூலி படத்தில் தான் வில்லனாக நடித்திருப்பதாக முன்பு பேட்டி ஒன்றில் நடிகர் நாகர்ஜுனா தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்தது குறித்து மகிழ்ச்சியும் தெரிவித்து இருந்தார் நாகர்ஜுனா.

Follow Us