Thalapathy Vijay: பீனிக்ஸ் படம் ரிலீஸ்.. விஜயை நேரில் சந்தித்த சூர்யா சேதுபதி!
Surya Sethupathi Met Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவரின் மகன் சூர்யா சேதுபதி பீனிக்ஸ் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில், அவர் தளபதி விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பீனிக்ஸ் (Phoenix) திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளவர் சூர்யா சேதுபதி (Surya Sethupathi) . இவர் நடிகர் விஜய் சேதுபதியின் (Vijay Sethupathi) மகன் ஆவார். இயக்குநர் அனல் அரசின் (Anal Arasu) இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தின் தொடர்பான அறிவிப்புகள் கடந்த 2024ம் ஆண்டிலே வெளியாகியிருந்த நிலையில், அதை தொடர்ந்து, இப்படத்தின் ஷூட்டிங்கும் நடந்து வந்தது. இந்த படத்தில் சூர்யா சேதுபதியுடன், வரலட்சுமி சரத்குமார் (Varalakshmi Sarathkumar) முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படமானது 2025, ஜூலை 4ம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படம் ரிலீஸை முன்னிட்டு நடிகர் தளபதி விஜயை (Thalapathy Vijay) , சூர்யா சேதுபதி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
இது தொடர்பான புகைப்படத்தை சூர்யா சேதுபதி தனது இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். இயக்குநர் அனல் அரசுடன், தளபதி விஜயை சந்தித்தது பற்றியும் அவர் வாழ்த்து தெரிவித்தது குறித்தும், எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த பதிவானது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.




தளபதி விஜயை சந்தித்தது வாழ்த்து பெற்ற சூர்யா சேதுபதி வெளியிட்ட பதிவு :
Thank you @actorvijay sir.
The last hug, the kind words, the warmth and it meant everything. I’ve always looked up to you, and to feel your support on this journey is something I’ll never forget. #ThalapathyVijay ❤️ 🙏🏽#Phoenix pic.twitter.com/B8t8EWxukO— Surya sethupathi (@suryaVoffcial) July 3, 2025
இந்த பதிவில் சூர்யா சேதுபதி, “நன்றி தளபதி விஜய் சார், கடைசியாகக் கட்டிப்பிடித்து, உங்களின் அன்பான வார்த்தைகள் மற்றும் அரவணைப்பு எல்லாம் எனக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது. நான் உங்களை எப்போதும் பார்த்து வளர்ந்திருக்கிறேன் மற்றும் உங்களைத்தான் ஆதரித்தும் வருகிறேன். இந்த பயணத்திற்கு உங்கள் ஆதரவை உணருவது என்னால் எப்போது மறக்கமுடியாத ஒன்றாக இருக்கும்” என அதில் சூர்யா சேதுபதி எழுதியுள்ளார்.
பீனிக்ஸ் திரைப்படம் :
பீனிக்ஸ் படத்திற்கு முன்னே சூர்யா சேதுபதி, விஜய் சேதுபதியின் சிந்துபாத் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதை அடுத்ததாக இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
இந்த படத்தில் அவருடன் சம்பத், வரலட்சுமி சரத்குமார், தேவதர்ஷினி மற்றும் பலரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம். சி.எஸ் இசையமைத்துள்ளார்.மேலும் இப்படத்தை பிரேவ் மென் பிக்சர்ஸ் நிறுவனமானது இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் கிக் பாக்சிங் தொடர்பான கதைக்களத்தில் இப்படமானது உருவாகியிருந்தது. இதில் சூர்யா சேதுபதியின் நடிப்பும் பாராட்டைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.