Jana Nayagan : தளபதி விஜய்யின் ‘ஜன நாயகன்’ ஷூட்டிங்.. தனுஷ் செய்த உதவி!
Dhanush And Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்து வருபவர் தளபதி விஜய். இவரின் நடிப்பில் இறுதி திரைப்படமாக உருவாகிவருவது ஜன நாயகன். இப்படத்தின் பாடல் படப்பிடிப்பிற்காக, தனுஷ் தனது படத்திற்காக அமைந்திருந்த ஷூட்டிங் செட்டை கொடுத்ததாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது . இது குறித்துப் பார்க்கலாம்.

தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) முன்னணி நடிப்பில் தயாராகிவரும் திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan) . இந்த படத்தை இயக்குநர் ஹெச். வினோத் (H. Vinoth) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே கார்த்தி முதல் அஜித் குமார வரை பல பிரபலங்களின் படங்களை இயக்கியுள்ளார். அதை தொடர்ந்து தளபதி விஜய்யின் இறுதி திரைப்படமாகக் கூறப்படும், ஜன நாயகன் படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்காக இசையமைப்பாளார் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படக் காட்சிகள் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், பாடல்கள் ஷூட்டிங் மட்டும் இன்னும் நிறைவடையவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது இணையத்தில் தகவல் ஒன்று வைரலாகி வருகியது. அது என்னவென்றால், ஜன நாயகன் படத்தின் பாடல் படப்பிடிப்பிற்காக நடிகர் தனுஷ் (Dhanush ), சுமார் ரூ 4 கோடி செலவில் அவரின் படத்திற்காக போடப்பட்ட செட்டை (Shooting Set) கொடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை.
ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட அறிமுக வீடியோ பதிவு :
#HBDThalapathyVijay ❤️
Let the celebration continue 🔥#JanaNayaganTheFirstRoar ▶️ https://t.co/Q981uzk8jA#JanaNayagan#Thalapathy @actorvijay sir #HVinoth @KvnProductions @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @prakashraaj @menongautham #Priyamani @itsNarain… pic.twitter.com/w3pLjT1ALL— KVN Productions (@KvnProductions) June 21, 2025
ஜன நாயகன் படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு :
தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக இந்த ஜன நாயகன் படம் இருக்கும் என கூறப்படும் நிலையில், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது ஏனென்றே கூறலாம். இந்த படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதையும் படிங்க :தனுஷின் இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? வைரலாகும் தகவல்
இந்த படமானது சுமார் ரூ. 400 கோடிகளுக்கு மேல் செலவில் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் தளபதி விஜய் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளார். இவர் போக்கிரி, தெறி மற்றும் ஜில்லா படத்தைத் தொடர்ந்து, 4வது முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தளபதி விஜய்யின் பெயர் தளபதி வெற்றி கொண்டான் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க :நீங்க இல்லனா.. விஜய்யை பற்றி பிக் பாஸ் ராஜு நெகிழ்ச்சி
இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு, ஜனவரி 09, தேதியில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் 5 மாதங்களுக்கும் மேல் இருக்கும் நிலையில், படத்தின் அடுத்தடுத்த தகவலும் வெளியாகும் என கூறப்படுகிறது.