Coolie : ரஜினிகாந்த்தின் ‘கூலி’… இத்தனை கோடிக்கு விற்பனையா?
Coolie Movie Distribution Rights Collection : நடிகர் ரஜினிகாந்த்தின் முன்னணி நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம்தான் கூலி. இயக்குநர் லோகேஷ் கனகராஜின் முன்னணி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில், மொத்த ரிலீஸ் விநியோகத்தில் மொத்தம் எவ்வளவு கோடி வசூல் செய்துள்ளது என்பதைப் பற்றி பார்க்கலாம்.

தமிழ் சினிமாவுல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து, வெற்றி பெற்ற இயக்குநர்களில் ஒருவர்தான் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) முன்னணி வேடத்தில் நடித்திருக்கும் படம்தான் கூலி (Coolie). இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அதிரடி ஆக்ஷ்ன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படமானது பான் இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது. கூலி திரைப்படமானது கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் தலைவர் 171வது திரைப்படமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பும் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆரம்பமானது. இந்த இந்த படத்தில் ரஜினிகாந்த்துடன் நடிகர்கள் அமீர்கான் (Aamir Khan), நாகார்ஜுனா (Nagarjuna), ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் மற்றும் உபேந்திரா என பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில், வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் பான் இந்திய ரிலீஸ் உரிமையைப் பெற்ற நிறுவனங்கள், மொத்தம் இப்படத்தை எவ்வளவு கோடியை கொடுத்த வாங்கியுள்ளது என்பதைப் பற்றிய அறிவிப்புகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்ன என்பதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.




கூலி படத்தின் ஒட்டுமொத்த விநியோக வசூல் விவரம் :
இந்த கூலி திரைப்படமானது, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமைக்கு ரூ.110 கோடி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா இணைந்து ரூ. 44 கோடி, கர்நாடகா ரூ 30 கோடி, கேரளா ரூ. 19 கோடி மற்றும் வெளிநாட்டு விநியோகத்தில் சுமார் ரூ. 85 கொடிகள் என மொத்தம் இதுவரை கூலி திரைப்படம் சுமார் ரூ. 288 கோடிகளுக்கு வியாபாரமாகியுள்ளது.
இதையும் படிங்க :ஜெய் பீம் படம் குறித்து மனம் திறந்து பேசிய நடிகை லிஜோமோல் ஜோஸ்!
இந்நிலையில், இந்த கூலி திரைப்படமானது ரிலீசாகுவதற்கு முன்னே சுமார் ரூ. 288 கோடிகளுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்புகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :நடிகர் சித்தார்த் எனது படத்தில் நடிக்க மறுத்தார் – இயக்குநர் சேகர் கம்முலா ஓபன் டாக்
கூலி படக்குழு வெளியிட அமீர்கான் அறிமுக பதிவு :
#AamirKhan as Dahaa, from the world of #Coolie 😎⚡#Coolie is all set to dominate IMAX screens worldwide from August 14th 🔥@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @anbariv @girishganges @philoedit… pic.twitter.com/VOh8P23srt
— Sun Pictures (@sunpictures) July 3, 2025
நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கும் நிலையில் முதல் பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்த இரண்டாவது பாடலும் வெகு விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்தின் ரிலீசிற்கு சிறிது நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில் அடுத்தடுத்த அறிவிப்புகளும் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.