Nagarajuna : சசிகுமாரின் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறாரா நாகார்ஜுனா.. எந்த படம் தெரியுமா?
Nagarjuna New Movie Update : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நாகார்ஜுனா. இவர் தெலுங்கு படங்களை தொடர்ந்து, தமிழ் படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் சசிகுமார் நடித்த தமிழ் படம் ஒன்றின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவருகிறது. அது எந்த திரைப்படம் என்பதை பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் நாகார்ஜுனா (Nagarjuna). இவர் தெலுங்கு மொழி படங்களைத் தொடர்ந்து, தமிழ் மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குபேரா (Kuberaa). இயக்குநர் சேகர் கம்முலாவின் (Sekhar Kammula) இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் முன்னணி வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் தனுஷ் (Dhanush) கதாநாயகனாக நடித்திருந்த நிலையில், அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் நாகார்ஜுனா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடமானது தெலுங்கு மொழியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டாகியிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக நடிகர் நாகார்ஜுனா அடுத்தடுத்த படங்களிலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சசிகுமார் (Sasikumar) நடிப்பில் தமிழில் வெளியான ஒரு படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த வேறு எந்த திரைப்படமும் இல்லை, சசிகுமாரின் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான அயோத்தி (Ayothi) திரைப்படம்தான். இந்த படத்தில் தெலுங்கு வெர்சனில்தான் நாகார்ஜுனர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்தான செய்தியைத் தினத்தந்தி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.




அயோத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் நாகார்ஜுனா
நடிகர் நாகார்ஜுனா, தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற மொழி திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். இவர் இந்நிலையில், சசிகுமார் நடித்த அயோத்தி படத்தின் தெலுங்கு வெர்சனில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிவருகிறது. இந்த படம் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில், தெலுங்கு ரசிகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் விதத்தில் நாகார்ஜுனா இப்படத்தில் நடிக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க :நான் ஹீரோவா நடிக்கப் போறேனா? இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் விளக்கம்!
இந்த படத்தின் ரீமேக் உரிமையைப் பெற டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் விரைவில் வெளியாகவும் என கூறப்படுகிறது.
நாகார்ஜுனாவின் குபேரா படக்குழு வெளியிட்ட பதிவு :
Week 3 and the fever is still high…#Kuberaa continues to win hearts everywhere ❤️🔥
Book your tickets now: https://t.co/4LlzXfOYKl #BlockBusterKuberaa #BOXOFFICEKuberaa #SekharKammulasKuberaa pic.twitter.com/TXOW9DnAjH
— Kuberaa Movie (@KuberaaTheMovie) July 1, 2025
சசிகுமாரின் அயோத்தி திரைப்படம் :
நடிகர் சசிகுமார் முன்னை நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான படம் அயோத்தி. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஆர். மந்திர மூர்த்தி இயக்கியிருந்தார். இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நடித்திருந்தார்.
இதையும் படிங்க :தனுஷின் குபேரா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!
கடந்த 2023ம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு நல்ல வரவேற்புகள் கிடைத்தது. மேலும் இப்படத்திற்குப் பல விருதுகளும் கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படமானது வெளியாகி நல்ல வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்த நிலையில் தற்போது இப்படத்தை நடிகர் நாகார்ஜுனா ரீமேக் செய்யவுள்ளதாகும் தகவல்கள் வெளியாகிவருகிறது.