AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தனுஷின் குபேரா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!

Kuberaa Movie OTT Update: நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற படம் குபேரா. இந்த நிலையில் குபேரா படம் எந்த ஓடிடியில் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தனுஷின் குபேரா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!
குபேரா Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Jul 2025 11:09 AM IST

கோலிவுட் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது ஹாலிவுட் வரை நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் (Actor Dhanush). சமீபத்தில் இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் குபேரா. தெலுங்கு சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் சேகர் கம்முலா இந்த குபேரா படத்தை இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நேஷ்னல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து இருந்த நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகரக்ள் நாகர்ஜுனா, ஜிம் சர்ப் மற்றும் தலிப் தஹில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவங்களான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் சுனில் நரங், புஸ்குர் ராம் மோகன் ராவ், அஜய் கைகாலா ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர்.

ஓடிடியில் வெளியாக காத்திருக்கும் குபேரா படம்:

குபேரா படம் கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகின்றது. அதன்படி இந்த குபேரா படத்தின் ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் ப்ரைம் வீடியோ பெற்றுள்ளது.

இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி 4 வாரங்கள் இன்னும் முடிவடையவில்லை. இந்த நிலையில் 4 வார முடிவில் படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகின்றது. அதன்படி குபேரா படத்தை வருகின்ற 18-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியிட திட்டமிட்டு வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை படக்குழு தரப்பில் இருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குபேரா படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறாத குபேரா படம்:

தனுஷின் நடிப்பில் உருவான குபேரா படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. பின்பு படத்தை பான் இந்திய மொழிகளில் வெளியிட்டனர். இந்த குபேரா படம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று படக்குழு எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம் இந்தப் படம் நன்றாக இல்லை என்று தமிழ் ரசிகர்கள் பெரும்பாளானோர் விமர்சனங்களை தெரிவித்ததால் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றியைப் பெற தவறியது இந்தப் படம்.

Follow Us