Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நடிகர் சித்தார்த் எனது படத்தில் நடிக்க மறுத்தார் – இயக்குநர் சேகர் கம்முலா ஓபன் டாக்

Director Sekhar Kammula: இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் குபேரா. இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இயக்குநர் சேகர் கம்முலா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

நடிகர் சித்தார்த் எனது படத்தில் நடிக்க மறுத்தார் – இயக்குநர் சேகர் கம்முலா ஓபன் டாக்
இயக்குநர் சேகர் கம்முலா, நடிகர் சித்தார்த் Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Jul 2025 12:47 PM

தெலுங்கு சினிமாவில், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருபவர் இயக்குநர் சேகர் கம்முலா (Director Sekhar Kammula). இவர் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான டாலர் ட்ரீம்ஸ் என்ற படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து பல ஹிட் படங்களை தெலுங்கு சினிமாவில் இயக்கி தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநர்களின் பட்டியளில் உள்ளார். இவரது இயக்கத்தில் தெலுங்கு சினிமாவில் வெளியான பலப் படங்களுக்கு தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சமூகப் பிரச்னைகளை மையமாக வைத்து இவர் இயக்கிய படங்கள் ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் சேகர் கம்முலா அளித்தப் பேட்டி ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நடிகர் சித்தார்த் குறித்து இயக்குநர் சேகர் கம்முலா சொன்ன விசயம்:

தமிழ் சினிமா மூலம் நடிகராக அறிமுகம் ஆனவர் நடிகர் சித்தார்த். இவர் தமிழில் பல ஹிட் படங்களில் நடித்து இருந்தாலும் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தெலுங்கு சினிமாவில் நடிகர் சித்தார்த் நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குநர் சேகர் கம்முலா அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் சித்தார் தனது படம் ஒன்றில் நடிக்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அதன்படி இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான படம் கோதாவரி. ரொமாண்டிக் காமெடி படமாக வெளியான இதில் நடிகர் சுமந்த் நாயகனாக நடித்து இருந்தார்.

Also read… மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா… என்ன நடந்தது தெரியுமா?

இந்தப் படத்தில் நடிகர் சுமந்தை நடிக்க வைப்பதற்கு முன்பு இயக்குநர் சேகர் கம்முலா இந்த கதையில் நடிகர் சித்தார்த்தை நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். அதன்படி நடிகர் சித்தார்த்திடம் இந்தப் படத்தின் கதையைக் கூறியபோது அவர் இதில் நடிக்க மறுத்துவிட்டார் என்று இயக்குநர் சேகர் கம்முலா அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய சேகர் கம்முலா, இந்தப் படத்தின் கதையை சித்தார்த்திடம் கூறும் போது அவர் சினிமாவில் உச்ச நடிகராக இருந்தார். ஒரு நடிகர் உச்ச நடிகராக இருக்கும் போது அவர்கள் நடிக்கும் படங்கள் அவர்களது சினிமா வாழ்க்கையை மேலும் உயர்த்த வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

Also read… விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியை லாக் செய்தது படக்குழு!

என்னால் சிறந்த படங்களை கொடுக்க முடியும். ஆனால் அந்தப் படம் நடிகரின் சினிமா வாழ்க்கையை உயர்த்தும் அல்லது அவர்களுக்கு புகழைத் தேடித்தரும் என்று என்னால் சொல்ல முடியாது என்றும் இயக்குநர் சேகர் கம்முலா அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

இயக்குநர் சேகர் கம்முலாவின் எக்ஸ் தள பதிவு: