Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இயக்குநர் ராம் இயக்கிய ‘பறந்து போ’ படத்தை புகழ்ந்து தள்ளிய நடிகை நயன்தாரா

Actress Nayanthara: கோலிவுட் சினிமா ரசிகரக்ளால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான பறந்து போ படத்தைப் பார்த்துவிட்டு படத்தைப் பாராட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் ராம் இயக்கிய ‘பறந்து போ’ படத்தை புகழ்ந்து தள்ளிய நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாராImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 08 Jul 2025 16:46 PM

இயக்குநர் ராம் (Director Ram) இயக்கத்தில் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவான படம் பறந்து போ. இந்தப் படம் கடந்த 4-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை கிரேஸ் ஆண்டனி நாயகியாகவும் இவர்களுடன் இணைந்து அஞ்சலி, மிதுல் ரியான், அஜூ வர்ஜீஸ், பாலாஜி சக்திவேல் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்தே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படத்தைப் பார்த்த பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை நயன்தாராவும் படத்தைப் பாராட்டி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இன்ஸ்டா ஸ்டோரியில் பறந்து போ படத்தைப் பாராட்டி எழுதிய நடிகை நயன்தாரா:

அதன்படி நடிகை நயன்தாரா வெளியிட்டு இருந்த இன்ஸ்டா ஸ்டோரியில் கூறியிருந்ததாவது,  இந்த குழப்பமான உலகில். வாழ்க்கையை உண்மையிலேயே உணர விரும்பினால். உங்கள் குழந்தைகளை மலைகளுக்கு அழைத்துச் செல்லுங்கள், அவர்களுடன் ஏறுங்கள், அல்லது நீங்கள் சோர்வடையும் வரை ஒரு குளத்தின் அருகே விளையாடுங்கள். அல்லது அவர்களை ராம் சாரின் பறந்து போ படத்திற்கு அழைத்துச் சென்று நாம் அனைவரும் உண்மையில் என்ன இழக்கிறோம் என்பதைக் காணுங்கள். முக்கியமானவற்றின் அமைதியான அழகான நினைவூட்டல் நான் பார்த்த மிக இனிமையான படங்களில் ஒன்று என்றும் தெரிவித்து இருந்தார். நீங்கள் சிறந்த இயக்குனர் ராம் சார். பறந்து போ மிகவும் நல்ல குழு சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, மிதுல் ரியான் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்து இருந்தார்.

பறந்து போ படத்தை கொண்டாடும் மக்கள்:

இயக்குநர் ராமின் இயக்கத்தில் முன்னதாக வெளியான படங்கள் அனைத்தும் மிகவும் சீரியசான கதையை மையமாகக் கொண்டு வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியாகியுள்ள பறந்து போ காமெடியை மையமாக வைத்து உருவாகியுள்ளது. திரையரங்குகளில் படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் சிரித்து சிரித்து ரசித்து வருகின்றனர்.

அப்பா மற்றும் மகன் இடையே இருக்கும் நட்பு மற்றும் பாசம் என மிகவும் அழகான ஒரு படத்தை இயக்குநர் ராம் இயக்கி உள்ளதாக படத்தைப் பார்த்தவர்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

பறந்து போ படம் குறித்து நடிகர் சிவா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: