Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Idly Kadai Vs Kantara 2 : தனுஷின் இட்லி கடை படத்துடன் மோதும் காந்தாரா 2.. பாக்ஸ் ஆபிஸ் யாருக்கு வெற்றி?

Dhanushs Idly Kadai vs Kantara 2 Movie Clash : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் தனுஷ், இவரைப் போலக் கன்னட மொழி சினிமாவில் கதாநாயகனாகவும் , இயக்குநராக இருந்து வருபவர் ரிஷப் ஷெட்டி. இவரின் இயக்கத்தில் காந்தாரா 2 படம் ரிலீசிற்கு தயாராகிவரும் நிலையில், இப்படத்தின் ரிலீஸின்போதுதான் தனுஷின் இட்லி கடை படமும் வெளியாகிறது. இது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

Idly Kadai Vs Kantara 2 : தனுஷின் இட்லி கடை படத்துடன் மோதும் காந்தாரா 2.. பாக்ஸ் ஆபிஸ் யாருக்கு வெற்றி?
இட்லி கடை மற்றும் காந்தாரா 2Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 07 Jul 2025 20:04 PM

நடிகர் தனுஷின் (Dhanush) முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான படம் குபேரா (Kuberaa). தெலுங்கு மொழியை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியிருந்த இப்படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருந்தார். இப்படமானது பான் இந்திய மொழிகளில் கடந்த 2025, ஜூன் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படமானது பாக்ஸ் ஆபிசில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிபெற்றிருந்தது. இந்நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து தனுஷின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் இட்லி கடை (Idly Kadai). இந்த படத்தில் தனுஷ் இயக்கி நடித்துள்ளார். இதில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் (Nithya Menon) இணைந்து நடித்துள்ளார். மேலும் தனுஷிற்கு இணையான ரோலில் நடிகர் அருண் விஜய் இப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த இட்லி கடை படமானது மிகவும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியிருக்கிறது. இந்த படத்தை டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது.

இப்படமானது அவரும் 2025, அக்டோபர் 1 ஆம் தேதியில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்துடன் பான் இந்திய படமாக உருவாகிவரும் காந்தாரா 2 (Kantara 2) படமானது மோதுகிறது. இட்லிக்கடை படம் 2025, அக்டோபர் 1ல் வெளியாகும் நிலையில், அதற்கு மறுநாள் அக்டோபர் 2ம் தேதியில் இந்த காந்தாரா படமானது திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த இரு படங்களுக்கும் இடையே நிச்சயமாக பாக்ஸ் ஆபிஸ் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காந்தாரா 2 படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர் :

காந்தாரா 2 திரைப்படம் :

கன்னட சினிமாவில் பிரபல இயக்குநர் மற்றும் நடிகராக இருந்து வருபவர் ரிஷப் ஷெட்டி. இவரின் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற திரைப்படம் காந்தாரா. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்துதான் காந்தாரா 2 படமானது உருவாகிவருகிறது. இந்த படத்திலும் நடிகர் ரிஷப் ஷெட்டி முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படமானது பஞ்சுரளி தெய்வத்தில் வரலாற்றுப் படமாக உருவாகிவருவதாகக் கூறப்படுகிறது.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக காந்தாரா 2 படம் உருவாகிவருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடையும் தருவாயில் இருக்கும் நிலையில், வரும் அக்டோபர் 2ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ரிலீசிற்கு ஒரு நாள் முன்புதான் தனுஷின் இட்லி கடை படமானது வெளியாகும் நிலையில், இரு படங்களுக்குள் கடும் போட்டி இருக்கும். இந்நிலையில், இந்த இரு படங்களில் இந்தப் படம் வெற்றியாகிறது என்பதைப் பொறுத்திருந்தது பார்க்கலாம்.