Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kantara Chapter 1 : ரிஷப் ஷெட்டியின் பிறந்தநாள்.. ‘காந்தாரா 2’ படக்குழு வெளியிட்ட பர்ஸ்ட் லுக்!

Rishabh Shetty Birthday Special : கன்னட பிரபல நடிகராகவும், இயக்குநராகவும் இருந்து வருபவர் ரிஷப் ஷெட்டி. இவரின் முன்னணி இயக்கத்திலும் நடிப்பிலும் உருவாகிவரும் படம்தான் காந்தாரா 2. இன்று 2025, ஜூலை 7ம் தேதியில் ரிஷப் ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு முதல் பார்வையை வெளியிட்டுள்ளது. இந்த முதல் போஸ்டரில் ரிஷப் ஷெட்டியின் தோற்றம் மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Kantara Chapter 1 : ரிஷப் ஷெட்டியின் பிறந்தநாள்.. ‘காந்தாரா 2’ படக்குழு வெளியிட்ட பர்ஸ்ட் லுக்!
காந்தாரா அத்தியாயம் 1Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 07 Jul 2025 13:58 PM

பான் இந்திய திரைப்படமாக வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்ற திரைப்படம் காந்தாரா (Kantara). கடந்த 2022ம் ஆண்டு வெளியான இப்படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த திரைப்படமானது கன்னட மொழியை அடிப்படியாகக் கொண்டு உருவாகியிருந்தது. கர்நாடக மக்களால் வணங்கப்படும் பஞ்சுரளி (Panjurali) என்ற தெய்வத்தின் கதைக்களத்துடன் இப்படம் உருவாகியிருந்தது. இந்த படத்தை நடிகர் ரிஷப் ஷெட்டி(Rishabh Shetty) இயக்கி, அதில் முன்னணி கதாநாயகன் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சப்தமி கவுடா (Sapthami Gowda) இணையதளத்தில் நடித்திருந்தார். கடந்த 2022ம் ஆண்டு வெளியான இப்படமானது ரூ. 14 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில், ரூ.400 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக இப்படத்தின் 2வது பாகம் உருவாகிவருகிறது. இந்நிலையில், இன்று 2025, ஜூலை 7ம் தேதியில் நடிகர் ரிஷப் ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு, காந்தாரா 2 படக்குழு முதல் பார்வையை (Kantara: Chapter 1 First look)  வெளியிட்டுள்ளது. இந்த முதல் பார்வையில் நடிகர் ரிஷப் ஷெட்டி வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும்படி உள்ள நிலையில், மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

காந்தாரா 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

காந்தாரா 2 திரைப்படத்தின் ரிலீஸ் மற்றும் பட்ஜெட் :

நடிகர் ரிஷப் ஷெட்டியின் இந்த காந்தாரா 2 திரைப்படத்தில் அவருடன் நடிகர்கள், ஜெயராம் மற்றும் ராகேஷ் பூஜாரி இணைந்து நடித்துள்ளனர். மேலும் பல பிரபலங்களும் இணைந்து நடித்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்களைப் பற்றிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்த திரைப்படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்து வருகிறாராம்.

மேலும் காந்தாரா 2 திரைப்படத்தய் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது வருகிறது. இந்த நிறுவனமானது இப்படத்தை சுமார் ரூ. 125 கோடிகளில் உருவாக்கிவருவதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், வரும் 2025, அக்டோபர் 2ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது.

காந்தாரா 2 ஷூட்டிங்கில் மரணங்கள் :

ரிஷப் ஷெட்டியின் இந்த காந்தாரா 2 திரைப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் தொடங்கியது. இந்த படத்தின் ஷூட்டிங் இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தநிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது கிட்டத்தட்ட 3 மரணங்கள் நிகழ்ந்துள்ளது. இந்த மரணங்களும் எதிர்ச்சியாக நடந்துள்ளது. ஷூட்டிங்கின் போது ஆற்றில் மூழ்கி ஒருவரும், மாரடைப்பால் ஒருவரும் மற்றும் மர்மமான முறையில் ஒருவர் என மொத்தம் 3 நபர்கள் இப்படத்தின் படப்பிடிப்பின்போது இறந்துள்ளனர். இந்த இறப்பும் மர்மமாக இருந்து வருகிறது.