Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Venky Atluri : தனுஷின் ‘வாத்தி 2’ உருவாகவிருக்கிறதா? – வெங்கி அட்லூரி விளக்கம்!

Venky Atluri Talk About Vaathi Sequel : நடிகர் தனுஷின் முன்னணி நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான திரைப்படம் வாத்தி. இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் இப்படம் வெளியாகியிருந்த நிலையில், சமீபத்தில் இப்படத்தின் பாகம் 2 உருவாகுவதாகக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் வெங்கி அட்லூரி விளக்கமளித்துள்ளார்.

Venky Atluri : தனுஷின் ‘வாத்தி 2’ உருவாகவிருக்கிறதா? – வெங்கி அட்லூரி விளக்கம்!
வெங்கி அட்லூரி மற்றும் தனுஷ்Image Source: Social Media
barath-murugan
Barath Murugan | Published: 06 Jul 2025 19:03 PM

தமிழ் படங்களைத் தொடர்ந்து, பான் இந்திய மொழி திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் தனுஷ் (Dhanush) . இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குபேரா (Kuberaa). தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவின் முன்னணி இயக்கத்தில் வெளியான இப்படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. முன்னதாக அவர் நடித்திருந்த வாத்தி (Vaathi) படமானது தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியானது. தனுஷின் இந்த படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri) இயக்கியிருந்தார். இந்த படத்தின் மூலம்தான் இயக்குநர் வெங்கி அட்லூரி  தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். இந்த படத்தில் தனுஷ் முன்னணி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா (Samyuktha) நடித்திருந்தார். பள்ளி மாணவர்களுக்கு சிறந்த கல்வி முறையைக் கொண்டுவரும் ஆசிரியர் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருந்தார்.

இந்த படமானது கடந்த  2023ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. சுமார் ரூ. 65 கோடியில் உருவான இப்படம் சுமார் ரூ 125 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் வெங்கி அட்லூரி இப்படத்தின் பாகம் 2 உருவாகிறதா என்பதைப் பற்றிப் பேசியுள்ளார்.

இயக்குநர் வெங்கி அட்லூரி பேச்சு :

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் வெங்கி அட்லூரியிடம், லக்கி பாஸ்கர் 2 மற்றும் வாத்தி 2 போன்ற திரைப்படங்கள் உருவாகிறதா என கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்குப் பதில் கொடுத்த வெங்கி அட்லூரி, “லக்கி பாஸ்கர் பாகம் 2 உருவாகிறது உண்மைதான். அந்த படத்தின் வேலைகள் நடந்து வருகிறது. சூர்யா46 படத்திற்குப் பின் அப்படத்தை இயக்குவேன் என நினைக்கிறேன். ஆனால் வாத்தி 2 திரைப்படம் உருவாக்குவது என்பது உண்மையல்ல. அந்த தகவல்கள் அனைத்தும் வதந்தி” எனக் கூறியுள்ளார். இந்த தகவலானது வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கும் நிலையில், தனுஷின் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

வெங்கி அட்லூரியின் சூர்யா46 திரைப்படம் :

இயக்குநர் வெங்கி அட்லூரி லக்கி பாஸ்கர் படத்தை தொடர்ந்து சூர்யாவுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துவரும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்து வருகிறார். இப்படத்தை சித்தாரா என்டேர்டைமென்ட் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்தது வருகிறார். இந்தப் படத்தின் மூலம் ஜி.வி.பிரகாஷ் மற்றும் வெங்கி அட்லூரி 3வது முறையாக இணைந்துள்ளனர்.  இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுவரும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு வெளியாகும் என கூறப்படுகிறது.