Venky Atluri : நான் சூர்யாவின் பெரிய ரசிகன்.. சூர்யா46 படம் பற்றி வெங்கி அட்லூரி பேச்சு!
Venky Atluri Talk About Suriya : தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் வெங்கி அட்லூரி. இவரின் இயக்கத்தில் சூர்யா 46 படம் உருவாகிவரும் நிலையில், சூர்யாவின் ரசிகன் என்பது பற்றியும், அவருக்காக எழுதியிருந்த கதைகளைப் பற்றியும் ஓபனாக பேசியுள்ளார்.

நடிகர் தனுஷின் (Dhanush) வாத்தி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri). இவரின் இயக்கத்தில் வெளியான வாத்தி (Vaathi) மற்றும் லக்கி பாஸ்கர் (Lucky Bhaskar) போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படங்களைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார். இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் முன்னணி நாயகனாக நடிக்க , அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்திருந்தார். கடந்த 2024ம் ஆண்டு வெளியான இப்படமானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்திருந்தது. இந்த படமானது சுமார் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்ததாகக் கூறப்படுகிறது . இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்துதான் இயக்குநர் வெங்கி அட்லூரி சூர்யாவுடன் (Suriya) அவரின் 46வது படத்தில் இணைந்துள்ளார்.
இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட் (Sithara Entertainment) நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் நாக வம்சி இணைந்து தயாரித்தது வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் வெங்கி அட்லூரி, தான் சூர்யாவின் மிகப் பெரிய ரசிகன் என்றும், சூர்யா46 (Suriya46) படக் கதையை தேர்ந்தெடுத்தது பற்றியும் கூறியிருக்கிறார். அதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.




சூர்யாவைப் பற்றி இயக்குநர் வெங்கி அட்லூரி பேச்சு
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் வெங்கி அட்லூரி, “நான் மிகப்பெரிய சூர்யா சார் ரசிகன். லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் புரொடக்ஷன் வேலைகள் நடந்துகொண்டிருக்கும்போதே, அவருக்கு நான் 2 படத்தில் கதையைக் கூறியிருந்தேன். அவருக்கும் அந்த கதைகள் மிகவும் பிடித்திருந்தது. அப்போதுதான் இந்த சூர்யா46 திரைப்படத்தின் கதையை அவர் தேர்ந்தெடுத்தார். அதன் பிறகு உடனே அந்த படத்தில் நடிப்பதற்கு சம்மதித்தார் என இயக்குநர் வெங்கி அட்லூரி ஓபனாக பேசியிருந்தார்.
சூர்யா46 பட அறிவிப்பு பதிவு :
The first step towards celebration, emotion and entertainment ❤️#Suriya46 shoot begins! @Suriya_offl #VenkyAtluri @_mamithabaiju @realradikaa @TandonRaveena @gvprakash @vamsi84 @NimishRavi @NavinNooli @Banglan16034849 #SaiSoujanya @SitharaEnts @Fortune4Cinemas #SrikaraStudios pic.twitter.com/WcBTgwA7LG
— Sithara Entertainments (@SitharaEnts) June 11, 2025
நடிகர் சூர்யாவின் முன்னணி நடிப்பில் 46வது திரைப்படமானது உருவாகிவருகிறது. இப்படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்க, சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனமானது தயாரித்து வருகிறது. இந்த திரைப்படமானது உண்மை சம்பவத்தை அடிப்படியாகக் கொண்டு உருவாகிவருவதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்து வருகிறார். இந்த படமானது சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகிவருவதாக கூறப்படுகிறது.
சூர்யாவின் இப்படத்திற்கு இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்ற வரும் நிலையில், இப்படத்தை படக்குழு வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு “விஸ்வநாதன் அண்ட் சைன்ஸ்” என டைட்டில் வைக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.