Rashmika Mandanna : நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ‘தி கேர்ள்பிரண்ட்’ பட அப்டேட்!
Rashmika Mandannas The Girlfriend Movie Update : பான் இந்திய நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் நடிப்பிலும், இயக்குநரும், நடிகருமான ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் தான் தி கேர்ள்பிரண்ட். இந்த படத்திலிருந்து படக்குழு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் (Rashmika Mandanna) நடிப்பில் பான் இந்திய மொழிகளில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. கன்னட சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் பிந்தைய மொழி படங்களில் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்திருக்கிறார். அவ்வாறு ரசிகர்களின் நேஷனல் கிரஷ் என அழைக்கப்படுகிறார். இந்நிலையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குபேரா (Kuberaa). தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில், வெளியான இப்படத்தில் நடிகர் தனுஷிற்கு (Dhanush) ஜோடியாக நடித்திருந்தார். இப்படமானது கலவையான விமர்சனங்களைப் பெற்று வெற்றி பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பைத் தொடர்ந்து இவர் நடித்துவந்த படம்தான் தி கேர்ள்பிரண்ட் (The Girlfriend). இந்த படத்தை நடிகரும், இயக்குநருமான ராகுல் ரவீந்திரன் (Rahul Ravindran) இயக்கியுள்ளார்.
இவரின் இயக்கத்தில் காதல் மற்றும் ரொமெண்டிக் திரைப்படமாக இப்படம் உருவாகியிருக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததாகக் கூறட்டும் நிலையில், தற்போது இப்படக்குழு முதல் பாடலுக்கான அப்டேட்டை கொடுத்துள்ளது. இப்படத்தின் முதல் பாடலின் ரிலீஸ் அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.




தி கேர்ள்பிரண்ட் படக்குழு வெளியிட்ட முதல் பாடல் குறித்த பதிவு
Romance, Rhythm, and Raw Emotion 🎼#TheGirlfriend shoot in full swing with a peppy and soulful song called #Nadhive being picturized on @iamRashmika & @Dheekshiths ❤🔥#TheGirlfriend Release Date Announcement & First Single Coming Soon ✨@HeshamAWMusic‘s soulful music will… pic.twitter.com/AgeLF0sOJk
— Geetha Arts (@GeethaArts) July 5, 2025
இந்த படத்தை இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கியிருக்கும் நிலையில், ராஷ்மிகா மந்தனா முன்னணி நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் லீட் ரோலில் நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிகர்கள் கௌஷிக் மஹாதா, தீக்ஷித் ஷெட்டி போன்ற நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது முற்றிலும் காதல் மற்றும் ரொமாண்டிக் கதைக்களத்துடன் உருவாகியிருக்கிறது.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில்தான் இப்படத்தின் பின்னணி இசை மற்றும் அனைத்து பாடல்களும் உருவாகியிருக்கிறது. இப்படமானது பான் இந்திய மொழிகளில் உருவாகியிருக்கும் நிலையில், வரும் 2025ம் ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் படக்குழு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படங்கள் :
நடிகை ராஷ்மிகா மந்தனா, இந்த படத்தைத் தொடர்ந்து பாலிவுட்டில் தாமா என்ற திகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இந்தி நடிகர் ஆயுஷ்மான் குரானா உடன் இணைந்து நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து மேலும் ஒரு இந்தி திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில், தற்போது நயன்தாரா மற்றும் அனுஷ்காவைப் போலப் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்திலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். அப்படிப்பட்ட படம்தான் மைசா. தெலுங்கு இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.