Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ghaati : அனுஷ்கா ஷெட்டி – விக்ரம் பிரபுவின் ‘காதி’: ரிலீஸ் ஒத்திவைப்பு!

Ghaati Movie Release Update : நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக` அறிமுகமாகியிருக்கும் படம்தான் காதி. அனுஷ்கா ஷெட்டி முன்னணி கதாநாயகியாக நடித்துள்ள இப்படமானது வரும் 2025, ஜூலை 11ம் தேதியில் வெளியாகும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது . இந்நிலையில், ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Ghaati : அனுஷ்கா ஷெட்டி – விக்ரம்  பிரபுவின் ‘காதி’: ரிலீஸ் ஒத்திவைப்பு!
காதி திரைப்படம்Image Source: X
barath-murugan
Barath Murugan | Updated On: 05 Jul 2025 18:51 PM

நடிகை அனுஷ்கா ஷெட்டியின்(Anushka Shetty) நடிப்பில், தெலுங்கு மொழியில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் காதி (Ghaati) . இந்த படத்தைப் பிரபல இயக்குநர் கிரிஷ் ஜாகர்லமுடி (Krish Jagarlamudi)  இயக்கியுள்ளார்.  பான் இந்திய திரைப்படமாக இந்த காதி உருவாகிவருகிறது. இப்படத்தின் முக்கிய அறிவிப்பை அனுஷ்காவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த படத்திலிருந்து 47 வினாடிகள் கொண்ட வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. அதில் இப்படத்தில் முன்னணி நாயகனாகத், தமிழ் நடிகர் விக்ரம் பிரபு ( Vikram Prabhu)  நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த படத்தின் மூலமாகத்தான் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்படமானது வரும் 2025, ஜூலை 11ம் தேதியில் வெளியாகவுள்ளது எனப் படக்குழு அறிவித்திருந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸை படக்குழு ஒத்திவைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் நிறைவடையாத காரணத்தால், இப்படத்தின் ரிலீஸை படக்குழு ஒத்திவைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்புகளை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காதி பட முதல் பாடல் குறித்த பதிவு :

காதி திரைப்படத்தின் கதைக்களம்

அனுஷ்கா ஷெட்டியின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் கொண்ட படமாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் விக்ரம் பிரபு மற்றும் அனுஷ்கா ஷெட்டி இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர் . இப்படமானது மாஃபியா, கடத்தல் சார்ந்த கதைக்களத்துடன் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தெலுங்கு சினிமாவில் நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் இப்படமானது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படமானது சுமார் ரூ. 60 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

காதி பட நடிகர்கள் :

இந்த படத்தில் விக்ரம் பிரபு மற்றும் அனுஷ்கா ஷெட்டியுடன், நடிகர்கள் ரம்யா கிருஷ்ணன், சைதன்யா ராவ், ஜெகபதி பாபு, ஜான் விஜய், ரவீந்தர் விஜய் மற்றும் விடிவி கணேஷ் என பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், விரைவில் அதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.