Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vijay Deverakonda : தனுஷின் ‘குபேரா’ – விஜய் தேவரகொண்டா நடிக்க மறுத்த காரணம் என்ன தெரியுமா?

Kuberaa Movie : தெலுங்கு சினிமாவில் இளம் நாயகனாகக் கலக்கி வருபவர் விஜய் தேவரகொண்டா. இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகி ஹிட்டாகியிருக்கிறது. இவர் தனுஷின் குபேரா படத்தில் முதலில் நடிக்கவிருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அதிலிருந்து விலகியதற்குக் காரணம் என்ன என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

Vijay Deverakonda : தனுஷின் ‘குபேரா’  – விஜய் தேவரகொண்டா நடிக்க மறுத்த காரணம் என்ன தெரியுமா?
தனுஷ் மற்றும் விஜய் தேவரகொண்டாImage Source: X
barath-murugan
Barath Murugan | Published: 05 Jul 2025 15:26 PM

இயக்குநர் சேகர் கமுல்லாவின் (Sekhar Kamulla) இயக்கத்தில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகியிருந்தது குபேரா (Kuberaa). இந்த படத்தில் நடிகர் தனுஷ்  (Dhanush) முன்னணி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna  நடித்திருந்தார். முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் வெளியான இப்படமானது கடந்த 2025, ஜூன் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. இந்த படத்தில் தனுஷ் பிச்சைக்காரன் வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். மேலும் இப்படத்தில் தெலுங்கு பிரபல நடிகரான நாகார்ஜுனாவும் (Nagarjuna)  மிக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த குபேரா திரைப்படமானது அரசியல் மற்றும் திரில்லர் திரைப்படமாக வெளியாகியிருந்தது. தமிழ் மக்கள் மத்தியில் அந்த அளவிற்கு வரவேற்பைப் பெறாவிட்டாலும். தெலுங்கு சினிமாவில் இப்படத்திற்கு வரவேற்புகள் அதிகமாக இருந்தது என்றே கூறலாம்.

மொத்தத்தில் இப்படமானது சுமார் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் ஆரம்பத்தில் நடிகர் தனுஷ் கதாபாத்திரத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டாதான் (Vijay Deverakonda)  நடிக்கவிருந்தாராம். அதைத் தொடர்ந்து, பிச்சைக்காரனாக நடித்தால் ரசிகர்களுக்குப் பிடிக்காமல் போகலாம் என்பதைக் காரணம் காட்டி விஜய் தேவரகொண்டா இப்படத்திலிருந்து விலகியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவலை தினத்தந்தி வெளியிட்டுள்ளது.

விஜய் தேவரகொண்டா விலகியதால் இணைந்த தனுஷ் :

நடிகர் விஜய் தேவரகொண்டா இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்த நிலையில், பிச்சைக்காரனாக நடிக்க விருப்பமில்லாத காரணத்தால் அவர் இப்படத்திலிருந்து விலகியுள்ளார். இதை தொடர்ந்துதான் நடிகர் தனுஷ் இப்படத்தில் கதாநாயகனாக இணைந்திருந்தார். இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டில் தனுஷ் 51 என்ற பெயரில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த குபேரா படத்தில் தனுஷ் தேவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே . இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தைத் தொடர்ந்து தெலுங்கு மக்களால் அதிகம் விரும்பப்பட்ட தமிழ் நடிகராகவும் தனுஷ் இருந்து வருகிறார். குபேரா திரைப்படத்தில் நடித்ததற்காகச் சிரஞ்சீவி, நாகார்ஜுனா மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் என பல பிரபலங்களிடம் பாராட்டுகளைப் பெற்றார் தனுஷ்.

விஜய் தேவரகொண்டாவின் புதிய திரைப்படம் :

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் கிங்டம். இந்த படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிகை பாக்யஸ்ரீ ப்ரோஸ் நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகின்றன.  இப்படமானது வரும் 2025ம், அக்டோபர் மாதத்தில் வெளியாக அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.