Maareesan : வடிவேலு மற்றும் ஃபகத் பாசிலின் ‘மாரீசன்’ – ரிலீஸ் எப்போது?
Maareesan Movie Release Date : மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாரீசன். இப்படத்தில் ஃபகத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது இறுதிக்கட்ட பணிகளில் இருந்துவரும் நிலையில், படக்குழு ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. தற்போது இந்த தகவலானது மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகர்கள் ஃபகத் பாசில் (Fahadh Basil) மற்றும் வடிவேலுவின் (Vadivelu) முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் மாரீசன் (Maareesan) . இந்த திரைப்படத்தை மலையாள சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவரான சுதீஷ் சங்கர் (Sudheesh Shankar) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நடிகர் ஃபகத் பாசில் மற்றும் நடிகர் வடிவேலு மிக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் அறிவிப்பு கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் வெளியானது. அதை தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்ற நிலையில், இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மற்றும் ஏ.பி இன்டர்நெஷனல் (A.P. International) இணைந்து தயாரித்து வருகின்றன. இந்நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த மாரீசன் திரைப்படமானது வரும் 2025, ஜூலை 25ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இது பற்றிய அறிவிப்பைப் படக்குழு வெளியிட்ட நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியிருக்கும் நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் பெரிய அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




மாரீசன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு :
The journey of Velan and Dhaya begins on 25th of July. A road trip like never before 🔥 #FahadhFaasil #Vadivelu @thisisysr @SuperGoodFilms_ #SudheeshSankar @actorvivekpra @moorthyisfine @dopkalai @sreejithsarang @madhankarky @sampathannamala @homescreenent @e4echennai… pic.twitter.com/us88zcGY6r
— AP International (@APIfilms) July 5, 2025
மாரீசன் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?
இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் மலையாளம் மற்றும் தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டு இந்த மாரீசன் படமானது உருவாகியிருக்கிறது. இந்த படத்தின் கதைக்களமானது முழுக்க டிராவல் மற்றும் நகைச்சுவை கதைக்களத்துடன் உருவாகியிருக்கிறதாம். இந்த திரைப்படத்தில் கோவை சரளாவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது வரும் 2025, ஜூலை 25ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் , இப்படத்தின் டிரெய்லர் வரும் 2025, ஜூலை 16ம் தேதி அல்லது 17ம் தேதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடிவேலு – ஃபகத் பாசில் கூட்டணி
நடிகர்கள் ஃபகத் பாசில் மற்றும் வடிவேலு இருவரும் ஏற்கனவே தமிழில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் முக்கிய நாயகனாக நடித்திருந்த நிலையில், ஃபகத் பாசில் வில்லனாக நடித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் மாரீசன் படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். மாமன்னன் படத்தில் இவர்கள் இருவரின் கூட்டணி மக்களால் ரசிக்கப்பட்ட நிலையில், இப்படத்திலும் இவர்களின் கூட்டணி மக்களிடையே வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.