Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ajith Kumar : ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ மாதிரியான படத்தில் நடிக்க விருப்பம் – அஜித் குமார் பேட்டி!

Ajith Kumar Speech : தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருந்து வருபவர் அஜித் குமார். இவர் திரைப்படங்களில் நடிப்பதைத் தொடர்ந்து, கார் ரேஸிலும் ஈடுபட்டுவரும் நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் மாதிரியான படங்களில் நடிப்பதற்கு ஆசை என தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

Ajith Kumar : ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ மாதிரியான படத்தில் நடிக்க விருப்பம் – அஜித் குமார் பேட்டி!
அஜித் குமார் Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 05 Jul 2025 17:20 PM

நடிகர் அஜித் குமாரின் (Ajith Kumar) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இப்படமானது சுமார் ரூ. 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்த படமானது நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியிருந்தது.  குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு திருப்திகரமான படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்து அஜித் குமார், கார் ரேஸ் (Car Race) பந்தயத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தற்போது உலக நாடுகளுக்கு இடையே நடைபெற்றுவரும் ஜிடி -24 கார் ரேஸ் பந்தயத்தில் இந்தியாவின் சார்பாக அஜித் குமார் கலந்துகொண்டு வருகிறார். தற்போது பிரான்ஸ் நாட்டில் நடைபெற்றுவரும் கார் ரேஸ் பந்தயத்தில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். போட்டிகளுக்கு இடையில் ஆங்கில சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

அதில் அவரிடம் தொகுப்பாளர் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் போன்ற படங்களில் நடிப்பதற்கு உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்றார் கேட்டிருந்தார். அதற்கு அஜித் குமார், “Why Not” என எளிமையாகப் பதிலளித்துள்ளார். அந்த பேட்டியில் அஜித் குமார் பேசியது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் மற்றும் F 1 போன்ற படங்களில் நடிக்க ஆசை என அஜித் குமார் பேச்சு

கார் ரேஸின் போது பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் அஜித் குமாரிடம், F 1 போன்ற படங்களில் நடிப்பதற்கு ஆசையா என்று கேள்விகளைத் தொகுப்பாளர் கேட்டிருந்தார். அதற்கு நடிகர் அஜித் குமார், “எனக்கும் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் மற்றும் F 1 போன்ற படங்களில் நடிப்பதற்கு ஆசைதான், நானும் அதுபோல சில படங்களில் நடித்திருக்கிறேன். சிம்பிளாக சொல்லவேண்டுமென்றால் “Why Not”. ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தின் தொடர்ச்சியிலோ அல்லது F 1 பட தொடர்ச்சியிலோ நடிக்க அழைப்பு வந்தால் நிச்சயமாக நடிப்பேன்” என நடிகர் அஜித் குமார் பேசியுள்ளார். தற்போது இது குறித்த வீடியோ மற்றும் தகவல்கள் மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அஜித் குமார் பேசிய வீடியோ :

அஜித் குமாரின் புதிய படம் :

அஜித் குமார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் AK 64 திரைப்படம் என்று கூறப்பட்டுவரும் இப்படத்தின் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. அஜித் குமாரின் 64வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2025, நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் அப்டேட் வெளியாகும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.