Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Suriya : மலையாள இயக்குநருடன் இணையும் சூர்யா – ஷூட்டிங் எப்போது தெரியுமா?

Suriya New Movie Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம்வருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் இறுதியாக ரெட்ரோ படம் வெளியாகியிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு இயக்குநருடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து மலையாளத்தில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் 47வது படத்தில் இணையவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அப்படத்தின் ஷூட்டிங் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

Suriya : மலையாள இயக்குநருடன் இணையும் சூர்யா – ஷூட்டிங் எப்போது தெரியுமா?
சூர்யா மற்றும் ஜித்து மாதவன்Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 05 Jul 2025 18:30 PM

நடிகர் சூர்யாவின் (Suriya)  நடிப்பில் இறுதியாக வெளியான படம் ரெட்ரோ (Retro). இந்த திரைப்படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வெற்றிப்படமாக அமைந்திருந்தது. இந்தப் படத்தையடுத்து,  இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியுடன் (RJ Balaji)  கருப்பு (Karuppu) படத்தில் இணைந்து நடித்துவந்தார். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் வரும் 2025, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து  சூர்யா தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர்களில் ஒருவரான வெங்கி அட்லூரியின் (Venky Atluri) இயக்கத்தில் சூர்யா46 படத்தில் இணைந்துள்ளார். தமிழ் இயக்குநர்களைத் தொடர்ந்து மற்ற மொழி இயக்குநர்களின் படங்களிலும் சூர்யா நடிக்கத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த படத்தைத் தொடர்ந்து சூர்யா மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan) இயக்கத்தில், சூர்யா47 படத்தில் இணையவுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த இயக்குநர் வேறு யாருமில்லை, நடிகர் ஃப்கத் பாசிலின் ஆவேசம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் இயக்கத்தில் சூர்யா இணையும், இப்படத்தின் ஷூட்டிங் இந்த 2025ம் ஆண்டு இறுதியில் தொடங்கவுள்ளதாக புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்த இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் 47வது படத்தின் ஷூட்டிங் :

நடிகர் சூர்யா தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில், அதைத் தொடர்ந்து மலையாள மொழியிலும் சினிமாவில் நடிகராகக் களமிறங்கவுள்ளார். மலையாளத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்தை இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கவுள்ளாராம். இப்படத்தின் கதை சூர்யாவிற்குப் பிடித்த நிலையில், படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷ்ன் பணிகளும் ஆரம்பமாகியுள்ளதாம்.

இந்த இந்த படத்தின் ஷூட்டிங் இந்த 2025ம் ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளதாம். மேலும் இந்த திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக மலையாள பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், விரைவில் இப்படத்தின் அடுத்த அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருப்பு பட டைட்டில் அப்டேட் பதிவு :

நடிகர் சூர்யாவின் நடிப்பில் ரெட்ரோ படத்தைத் தொடர்ந்து ரிலீசிற்கு காத்திருக்கும் படம் கருப்பு. ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில், சூர்யாவிற்கு ஜோடியாக திரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார்.  ஆக்ஷ்ன் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தை ட்ரீம்ஸ் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது.

மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் பணிகளிலிருந்துவருகிறது. மேலும் இப்படத்தை வரும் 2025, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.