Suresh Raina’s Tamil Film Debut: கிரிக்கெட்டர் டூ நடிகர்! தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சின்ன தல.. ரெய்னா ரசிகர்கள் மகிழ்ச்சி!
Suresh Raina to Debut in Tamil Movie: சின்ன தல என்று அன்போடு அழைக்கப்படும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, டிரீம் நைட் ஸ்டோரிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய தமிழ்ப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இயக்குனர் லோகன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில், கிரிக்கெட் பின்னணி கொண்ட கதைக்களம் இடம் பெறும். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) ரசிகர்களால் ‘சின்ன தல’ என்று அன்பாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா (Suresh Raina), டிரீம் நைட் ஸ்டோரிஸ் தயாரிப்பு நிறுவனத்தில் கீழ் ஒரு தமிழ் படத்தில் நடிக்க உள்ளார். சுரேஷ் ரெய்னாவின் வருகையை அறிவிக்கும் வீடியோவை டிரீம் நைட் ஸ்டோரிஸ் (Dream Knight Stories) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. கிரிக்கெட் பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் சுரேஷ் ரெய்னா முக்கிய வேடத்தில் நடிக்க, லோகன் என்ற இயக்குநர் இயக்க, ட்ரீம் நைட் ஸ்டோரிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் ஷ்ரவன் குமார் தயாரிக்கிறார். இதை சென்னையில் நடைபெற்ற இரு நிகழ்ச்சியில் ரெய்னாவின் அறிமுகத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தமிழ் சினிமாவில் சுரேஷ் ரெய்னா:
கிரிக்கெட் ரசிகர்களால் மிஸ்டர் ஐபிஎல் என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி, தமிழ்நாட்டு மக்களின் மனதில் இடம் பிடித்தார். இதனால், இவருக்கும் தோனியை போல தமிழ்நாட்டுடன் ஒரு சிறப்பு தொடர்பு உள்ளது. நேற்று அதாவது 2025 ஜூலை 4ம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் ஷிவம் துபே தயாரிப்பு நிறுவனத்தின் லோகோவை வெளியிட்டார். தற்போது தனது குடும்பத்துடன் நெதர்லாந்து சுற்றுப்பயணத்தில் இருக்கும் சுரேஷ் ரெய்னா, இந்த நிகழ்ச்சியில் வீடியோ கால் மூலம் பங்கேற்றார்.




சினிமாவில் அறிமுகமாகும் சின்ன தல:
Welcoming Chinna Thala @ImRaina ❤️ on board for #DKSProductionNo1! 💥🗡️@Logan__you @Music_Santhosh @supremesundar @resulp @muthurajthangvl @sandeepkvijay_ @saravananskdks @TibosSolutions @kgfsportz #sureshraina #chinnathala #dreamknightstories pic.twitter.com/8FnkmNdIeY
— Dream Knight Stories Private Limited (@DKSoffl) July 4, 2025
சினிமாவில் இதுவரை கலக்கிய கிரிக்கெட் வீரர்கள்:
சுரேஷ் ரெய்னா மட்டுமல்லாது பல கிரிக்கெட் வீரர்கள் ஏற்கனவே திரையுலகின் தங்கள் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு சியான் விக்ரம் நடித்த கோப்ரா படத்தில் இர்ஃபான் பதான் இண்டர்போல் அதிகாரியாக நடித்திருந்தார். அதேபோல், முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். ஆக்ஷன் கிங் அர்ஜூனுடன் இணைந்து ஃப்ரெண்ட்ஷிப் படத்தில் நடித்தார். பாலிவுட்டில் பிரபல கதாநாயகிகள் சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஹூமா குரேஷி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த டபுள் எக்ஸ்.எல் படத்தில் முன்னாள் இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவான் கெஸ்ட் ரோலில் நடித்தார். அதேபோல், முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களிலும் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி, முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி தனது தயாரிப்பு நிறுவனமான தோனி எண்டர்டெயின்மெண்ட் கீழ் எல்ஜிஎம் படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.