Yashasvi Jaiswal: குறைந்த இன்னிங்ஸில் 2000 ரன்கள்.. புதிய மைல்கல்லை எட்டிய யஷஸ்வி ஜெய்ஸ்வால்..!
Jaiswal Joins Elite Club: யஷஸ்வி ஜெய்ஸ்வால் 40 இன்னிங்ஸ்களில் 2000 டெஸ்ட் ரன்களை எட்டியுள்ளார், இது இந்திய வீரர்களின் வரலாற்றில் வேகமான சாதனை. இதன் மூலம் ராகுல் டிராவிட் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோரை சமன் செய்துள்ளார். 23 வயதிலேயே இச்சாதனையை படைத்துள்ளார். இது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல் ஆகும்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) தனது சர்வதேச டெஸ்ட் வாழ்க்கையில் 2,000 ரன்களை நிறைவு செய்துள்ளார். பர்மிங்காம் டெஸ்ட் போட்டியின் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது இன்னிங்ஸில் 10 ரன்கள் எடுத்தவுடன் ஜெய்ஸ்வால் இந்த சாதனையை படைத்தார். அதன்படி, டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 2,000 ரன்கள் எடுத்த இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தற்போது முதலிடத்தை பிடித்துள்ளார். அதன்படி, வெறும் 40 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன், இவ்வளவு இன்னிங்ஸ்களில் 2,000 ரன்களை நிறைவு செய்த ஒரே பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் மட்டுமல்ல, இவருக்கு முன், வீரேந்தர் சேவாக் மற்றும் ராகுல் டிராவிட் (Rahul Dravid) ஆகியோரும் அதே எண்ணிக்கையிலான இன்னிங்ஸ்களில் 2,000 ரன்களை எட்டியுள்ளனர்.
இந்தியாவுக்காக வேகமாக 2000 டெஸ்ட் ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்:
ராகுல் டிராவிட் மற்றும் வீரேந்திர சேவாக் இருவரும் 40 இன்னிங்ஸ்களில் 2,000 டெஸ்ட் ரன்களை நிறைவு செய்தனர். இப்போது ஜெய்ஸ்வாலும் அதே எண்ணிக்கையிலான இன்னிங்ஸ்களில் 2,000 ரன்களை நிறைவு செய்துள்ளார். பர்மிங்காம் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 87 ரன்கள் எடுத்த பிறகு ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார், இதன் காரணமாக அவர் 39 இன்னிங்ஸ்களில் 2,000 ரன்களை எட்டுவதற்கு 10 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. முதல் இன்னிங்ஸில் அவர் இன்னும் 10 ரன்கள் எடுத்திருந்தால், டெஸ்ட் போட்டிகளில் 2,000 ரன்களை வேகமாக அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றிருப்பார். அதேநேரத்தில், முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி 53 இன்னிங்ஸ்களில் 2,000 ரன்களை நிறைவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




குறைந்த இன்னிங்ஸில் 2000 ரன்கள்:
Yashasvi Jaiswal joins the elite club of Indian Test greats✨
A rising star among legends🫡#ENGvsIND #YashasviJaiswal #CricTracker pic.twitter.com/BZIlfzVrkU
— CricTracker (@Cricketracker) July 4, 2025
- யஷஸ்வி ஜெய்ஸ்வால் – 40 இன்னிங்ஸ்
- ராகுல் டிராவிட் – 40 இன்னிங்ஸ்கள்
- வீரேந்தர் சேவாக் – 40 இன்னிங்ஸ்கள்
- விஜய் ஹசாரே – 43 இன்னிங்ஸ்கள்
- கவுதம் கம்பீர் – 43 இன்னிங்ஸ்
இளம் இந்திய வீரர் என்ற சாதனை:
இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தற்போது 2,000 டெஸ்ட் ரன்களை நிறைவு செய்த இளைய இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவர் இந்த சாதனையை 23 ஆண்டுகள் மற்றும் 188 நாட்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். அதேநேரத்தில், 2,000 டெஸ்ட் ரன்களை நிறைவு செய்த இளைய இந்திய பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் ஆவார். சச்சின் இந்த சாதனையை 20 ஆண்டுகள் மற்றும் 330 நாட்களில் இந்த சாதனையை படைத்து அசத்தினார்.