India Bangladesh Tour: கோலி-ரோஹித் களமிறங்குவதில் தாமதம்! தள்ளி போகிறதா இந்தியா – வங்கதேச தொடர்..?
Rohit Sharma, Virat Kohli ODI Return: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் இந்திய அணிக்குத் திரும்புதல் வங்கதேச சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டதால் தள்ளிப்போயுள்ளது. இந்திய அரசின் அனுமதி தாமதத்தால் சுற்றுப்பயணம் தள்ளிப்போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இருவரும் 2025 அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தான் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 2027 ஒருநாள் உலகக் கோப்பையை நோக்கமாகக் கொண்டு இருவரும் தற்போது ஓய்வெடுத்து வருகின்றனர்.

இந்திய அணியின் ஜாம்பவான்களான விராட் கோலி (Virat Kohli) மற்றும் ரோஹித் சர்மா (Rohit Sharma) ஆகியோர் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர். இந்த 2 வீரர்களும் இனி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா மீண்டும் இந்திய அணிக்காக எப்போது விளையாடுவார்கள் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தநிலையில் கிடைத்த தகவலின்படி, கோலி-ரோஹித் களம் இறங்குவதை காண இன்னும் நீண்ட நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. அதன்படி, இரு வீரர்களும் இப்போது சர்வதேச கிரிக்கெட்டுக்கு தாமதமாகத் திரும்புவார்கள். இதற்கு, ஒரு வகையில் பிசிசிஐ (BCCI) மற்றும் மத்திய அரசும் என்றும் கூறப்படுகிறது.
என்ன காரணம்..?
இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்குப் பிறகு, இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. வங்கதேச சுற்றுப்பயணம் செல்வதற்காக இந்திய அரசிடம் பிசிசிஐ அனுமதி கோரியது. ஆனால், இதுநாள் வரை வங்கதேச சுற்றுப்பயணம் செல்ல அனுமதி வழங்குவதில் இந்திய அரசு தற்போது தாமதம் செய்து வருகிறது. இதன் காரணமாக, இந்தத் தொடரை மீண்டும் திட்டமிடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், வருகின்ற 2025 ஆகஸ்ட் 17ம் தேதி விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்கமாட்டார்கள்.




இந்திய அணியின் வங்கதேச சுற்றுப்பயண அட்டவணை:
ஒருநாள் தொடர்:
முதல் ஒருநாள் போட்டி – 2025 ஆகஸ்ட் 17, மிர்பூர்
2வது ஒருநாள் போட்டி – 2025 ஆகஸ்ட் 20, மிர்பூர்
3வது ஒருநாள் போட்டி – 2025 ஆகஸ்ட் 23, சட்டோகிராம்
டி20ஐ தொடர்:
முதல் டி20ஐ – 2025 ஆகஸ்ட் 26, சட்டோகிராம்
2வது டி20ஐ – 2025 ஆகஸ்ட் 29, மிர்பூர்
3வது டி20ஐ – 2025 ஆகஸ்ட் 31, மிர்பூர்
சர்வதேச போட்டிகளில் எப்போது கோலி – ரோஹித்தை காணலாம்..?
🚨 THE RETURN OF ROHIT & VIRAT TO BE DELAYED 🚨
– India tour to Bangladesh is likely to be rescheduled due to the pending clearance from the Indian Government. [AFP] pic.twitter.com/hxTAuIUuj1
— Johns. (@CricCrazyJohns) July 2, 2025
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை வருகின்ற 2025 அக்டோபர் 19ம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் காணலாம். இந்திய அணி வருகின்ற 2025 அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. அங்கு இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வருகின்ற 2025 அக்டோபர் 19ம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது. வங்கதேச சுற்றுப்பயணம் தாமதமானதால், இரு ஜாம்பவான்களும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவதை மட்டுமே காண முடியும். ஐபிஎல் 2025க்குப் பிறகு, கோலி – ரோஹித் சர்மா ஆகியோர் தற்போது தங்கள் குடும்பங்களுடன் நேரத்தைச் செலவிடுகின்றனர். அறிக்கைகளின்படி, இரு வீரர்களும் 2027 ஒருநாள் உலகக் கோப்பையை விளையாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். ஒருநாள் வடிவத்தில் அவர்கள் விளையாடிய கடைசி போட்டி 2025 சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.