Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

MS Dhoni: இனி வேறு யாரும் ‘கேப்டன் கூல்’ ஆக முடியாது… வர்த்தக முத்திரையை பதிவு செய்த மகேந்திர சிங் தோனி!

Captain Cool Trademarked: எம்.எஸ். தோனி தனது பிரபலமான "கேப்டன் கூல்" என்ற புனைப்பெயரை வர்த்தக முத்திரையாகப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம், விளையாட்டுப் பயிற்சி, வசதிகள் மற்றும் சேவைகள் போன்ற துறைகளில் இந்தப் பெயரை அவர் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த நடவடிக்கை, பிரபலங்களின் பெயர்களை வர்த்தக முத்திரையாக்கும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், தோனியின் பிராண்ட் கட்டமைப்பிற்கு வலு சேர்க்கும். இதற்கு முன்னர் இதே பெயருக்கு வேறு நிறுவனம் விண்ணப்பித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

MS Dhoni: இனி வேறு யாரும் ‘கேப்டன் கூல்’ ஆக முடியாது… வர்த்தக முத்திரையை பதிவு செய்த மகேந்திர சிங் தோனி!
மகேந்திர சிங் தோனிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 30 Jun 2025 19:34 PM IST

இந்திய அணியின் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான எம்.எஸ்.தோனிக்கு (MS Dhoni) உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், 3 ஐசிசி கோப்பைகளை வென்றவருமான தோனி தனது கேப்டன்சியின்போது இக்கட்டான நிலைமைகளில் பல வியூகங்களை அமைத்து இந்திய அணிக்கு (Indian Cricket Team) பல வெற்றிகளை தேடி கொடுத்துள்ளார். இதன் காரணமாக, தோனியை அவரது ரசிகர்கள் ‘கேப்டன் கூல்’ என்று அன்பாக அழைப்பார்கள். இந்தநிலையில், கேப்டன் கூல் (Captain Cool) என்ற வார்த்தையை மகேந்திர சிங் தோனி வர்த்தக முத்திரையாக பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். இதன்மூலம், எந்த ஒரு தனிநபரோ அல்லது நிறுவனமோ தோனியை தவிர கேப்டன் கூல் என்ற வார்த்தையை பயன்படுத்த முடியாது.

வர்த்தக முத்திரை பதிவு:

’கேப்டன் கூல்’ என்ற பெயரின் வர்த்தக முத்திரையை பதிவு செய்ய மகேந்திர சிங் தோனி கடந்த 2025 ஜூன் 5ம் தேதி வர்த்தக முத்திரைகள் பதிவு போர்ட்டலில் விண்ணப்பித்துள்ளார். வர்த்தக முத்திரை பதிவு போர்ட்டலின் படி, இந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2025 ஜூன் 16ம் தேதி ’கேப்டன் கூல்’ என்ற பெயர் அதிகாரப்பூர்வ வர்த்தக முத்திரை இதழிலும் வெளியிடப்பட்டது.

இந்த வர்த்தக முத்திரை முக்கியமாக விளையாட்டு பயிற்சி, விளையாட்டு வசதிகள் மற்றும் பயிற்சி சேவைகள் தொடர்பான பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இதுகுறித்து, மகேந்திர சிங் தோனி தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. முன்னதாக, பிரபா ஸ்கில் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனமும் ‘கேப்டன் கூல்’ என்ற வார்த்தைக்கு விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த விண்ணப்பத்தின் நிலையில் தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

பிராண்ட் நோக்கம்:

பிராண்டிங் நோக்கங்களுக்கான ஒரு பெயரையோ அல்லது பிரபல எழுத்துகளையோ வர்த்தக முத்திரையிடுவது இப்போதெல்லாம் பிரபலங்கள் மற்றும் நிறுவனங்களிடையே நடைமுறையாகிவிட்டது. எம்.எஸ்.தோனிக்கு பல பிரபல விளையாட்டு வீரர்கள் தங்கள் வர்த்தக முத்திரைகளை பதிவு செய்துள்ளனர். இதேபோல், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் ஆடை முதல் உணவகங்கள் வரை பல துறைகளில் தனது வணிகத்தை விளம்பரப்படுத்த ‘One8′ பிராண்டை பயன்படுத்தியுள்ளார். கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ‘CR7′ என்ற பெயரை வர்த்தக முத்திரையாக பதிவு செய்துள்ளனர்.

3 ஐசிசி கோப்பையை வென்ற எம்.எஸ்.தோனி:

மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி இதுவரை ஐசிசி அணி பட்டங்களை வென்றது. 2007ம் ஆண்டு இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றது. இதன் பிறகு, 2011 ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையையும், 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியையும் கைப்பற்றியது. இப்போது எம்.எஸ்.தோனி ஆடை, டிஜிட்டல் உள்ளடக்கம், வணிகப் பொருட்கள் ஆகியவற்றில் ‘கேப்டன் கூல்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது.