Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Jasprit Bumrah: இந்திய ரசிகர்களுக்கு நல்ல செய்தி! தீவிர பயிற்சியில் பும்ரா.. இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் களமா?

India vs England 2nd Test: இந்தியா-இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர், ஜஸ்பிரித் பும்ராவின் பங்களிப்பு குறித்த சந்தேகம் நிலவி வருகிறது. முதல் பயிற்சியில் பங்கேற்காததால் வதந்திகள் பரவினாலும், அடுத்தடுத்த பயிற்சிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். பும்ரா மட்டுமின்றி, சாய் சுதர்ஷன் போன்ற வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அணியின் வெற்றிக்கு பும்ராவின் பங்கு முக்கியம் என்பதால், அவரது களமிறக்கம் எதிர்பார்க்கப்படுகிறது.

Jasprit Bumrah: இந்திய ரசிகர்களுக்கு நல்ல செய்தி! தீவிர பயிற்சியில் பும்ரா.. இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் களமா?
ஜஸ்பிரித் பும்ராImage Source: AP
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 30 Jun 2025 08:13 AM IST

2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு, இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து, இந்தியா மற்றும் இங்கிலாந்து தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகின்ற 2025 ஜூலை 2ம் தேதி முதல் எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும். இந்தப் போட்டிக்கான இந்திய அணியின் முதல் பயிற்சி அமர்வானது கடந்த 2025 ஜூன் 27ம் தேதி முதல் தொடங்கியது. இதில் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) ஸ்டேடியத்தில் இருந்தபோதிலும் பயிற்சி செய்யவில்லை. இதையடுத்து, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாட மாட்டார் என்ற வதந்திகள் தற்போது வேகமாக பரவி வருகின்றன.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாட மாட்டார் என்ற வதந்திகள் பொய் என்பதை நிரூபிக்கும் வகையில், ஒரு சூப்பர் அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும், பும்ரா விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஜஸ்பிரித் பும்ரா 2வது டெஸ்ட் போட்டியில் களம் காண்பாரா..?

டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்திகளின்படி, வருகின்ற 2025 ஜூன் 28ம் தேதி இந்திய அணிக்கு விருப்ப பயிற்சி நாள் மேற்கொள்ளப்பட்டது. இதில், இந்தியா – இங்கிலாந்து என 2 அணிகளை சேர்ந்த வீரர்களும் ஸ்டேடியத்தில் இருந்தனர். ஆனாலும் ஒரு சில வீரர்கள் ஓய்வெடுத்ததாகவும் கூறப்படுகிறது. கிடைத்த தகவலின்படி, இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், துணை கேப்டன் ரிஷப் பண்ட் , கே.எல். ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இந்த பயிற்சி அமர்வில் பங்கேற்கவில்லை. ஹெடிங்லியில் நடந்த தனது டெஸ்ட் அறிமுகப் போட்டியில் சாய் சுதர்ஷன் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை, ஆனால் இரண்டாவது டெஸ்டுக்கு முன்பு, சாய் சுதர்ஷன் வலைகளிலும் அதிக நேரம் பயிற்சி மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

முதல் நாள் பயிற்சியில் ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் பந்து வீசவில்லை. அவர்கள் பீல்டிங் பயிற்சி செய்தனர். அதே நேரத்தில் முகமது சிராஜ் பேட்டிங் பயிற்சி செய்துள்ளார். ஆனால் நேற்று முன் தினம் அதாவது 2025 ஜூன் 28ம் தேதி ஜஸ்பிரித் பும்ராவுடன் சேர்ந்து, பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது சிராஜும் பந்து வீசுவதை நிறைய பயிற்சி செய்தனர். ஹெடிங்லியில் இந்திய அணியின் மோசமான பேட்டிங் செயல்திறனைக் கருத்தில் கொண்டு, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜும் பேட்டிங்கிலும் பயிற்சி செய்தனர். இதன் காரணமாக, இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பும்ரா களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.