AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

India vs England 2nd Test: 5 நாளும் மழைக்கு வாய்ப்பு.. இந்தியா – இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டி நடைபெறுமா..?

India vs England Test Series 2025: இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஜூலை 2ம் தேதி எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. முதல் நாள் 91% மழை வாய்ப்புள்ளது. அடுத்த நாட்கள் தெளிவான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. 3ம் நாள் 25%, 4ம் நாள் 1%, 5ம் நாள் 10% மழை வாய்ப்பு. வெப்பநிலை 11-24 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இந்திய அணி தொடரை சமன் செய்ய இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும்.

India vs England 2nd Test: 5 நாளும் மழைக்கு வாய்ப்பு.. இந்தியா – இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டி நடைபெறுமா..?
இந்திய கிரிக்கெட் அணிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 29 Jun 2025 10:00 AM IST

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் (India vs England Test Series 2025) கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி (Indian Cricket Team) தோல்வியை சந்தித்தது. இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வருகின்ற 2025 ஜூலை 2ம் தேதி எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் எப்படியாவது வெற்றிபெற்று தொடரை சமன் செய்ய சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி விரும்பும். இந்த போட்டியில் மழை சில இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும். அதன்படி, போட்டி நடைபெறும் 5 நாட்களுக்கான வானிலை எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

5 நாளும் வானிலை எப்படி..?

2025 ஜூலை 2ம் தேதியான முதல் நாள் 1:

அக்வெதரின் படி, இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் மழை பெய்ய 91 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், மழை பெய்யாத நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அந்த நாளில் அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

2025 ஜூலை 3ம் தேதியான முதல் நாள் 2:

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில், வானிலை பெரும்பாலும் தெளிவாக இருக்கும். வானமும் கிட்டத்தட்ட தெளிவாக இருக்கும். சூரியனும் பிரகாசிக்கும். இந்த நாளில், அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

2025 ஜூலை 4ம் தேதியான முதல் நாள் 3:

இரண்டாவது போட்டியின் மூன்றாம் நாளில் கிரிக்கெட்டுக்கு எந்த தடையும் இருக்காது என்று கூறப்படுகிறது. இந்த நாளிலும் வானிலை பெரும்பாலும் தெளிவாக இருக்கும். அதாவது, மழை பெய்யும் வாய்ப்பு 25 சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளது. 3ம் நாளில் குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

2025 ஜூலை 5ம் தேதியான முதல் நாள் 4:

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 4வது நாளில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். இருப்பினும், இந்த நாளில் மழை பெய்ய 1 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளது. இந்த நாளில் அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

2025 ஜூலை 6ம் தேதியான முதல் நாள் 5:

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் கடைசி மற்றும் ஐந்தாம் நாளில் வானம் முற்றிலும் மேகமூட்டத்துடன் இருக்கும். இருப்பினும், மழைக்கான வாய்ப்பு 10 சதவீதம் மட்டுமே. இந்த நாளில் அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

தொடரை சமன் செய்யுமா இந்தியா..?

ஹெடிங்லியில் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதன்மூலம், இந்த தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. அதனால்தான் இந்திய அணி எப்படியாவது இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய விரும்புகிறது.

Follow Us