Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : சுப்மன் கில் தலையில் பலமாக பட்ட பந்து – ஓடிச்சென்று உதவிய ரிஷப் பந்த்

Gill Hit, Pant Cares : இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஷுப்மன் கில்லின் தலையில் பந்து பட, அவர் வலியால் துடித்தார். உடனடியாக அவருக்கு ரிஷப் பந்த் உதவி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video : சுப்மன் கில் தலையில் பலமாக பட்ட பந்து – ஓடிச்சென்று உதவிய ரிஷப் பந்த்
சுப்மன் கில் - ரிஷப் பந்த்
karthikeyan-s
Karthikeyan S | Published: 04 Jul 2025 20:42 PM

இங்கிலாந்துக்கு (England) எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill) தலையில் பலமாக பந்து பட்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஜூலை 4, 2025 அன்று காலை ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) வீசிய  பந்தை, இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக் வலது பக்கமாக ஃபோர்கட் செய்தார். அந்த பந்து வேகமாக, ஸ்லிப் பகுதியில் நின்று விளையாடிக் கொண்டிருந்த  சுப்மன் கில்லின் தலையின் மேல் பகுதியில் பட்டது. எதிர்பாராத இந்த தாக்குதலால் அவர் சில நிமிடங்கள் வலியால் சிரமத்திற்குள்ளானார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஓடி வந்து உதவிய ரிஷப் பண்ட்

கில்லின் நிலையைப் பார்த்ததும், கீப்பராக இருந்த ரிஷப் பண்ட் உடனே அருகே சென்று கில்லின் தலை பகுதியில் கை வைத்து காயம் ஏற்பட்டிருக்கிறதா என பார்த்தார். பின்னர் உடனடியாக பிசியோவை அழைத்தார். சிறிய சிகிச்சைக்கு பிறகு, கில் மீண்டும் களத்துக்கு திரும்பினார். தனது அணி வீரர் காயம்பட்டதும் ஓடி சென்று உதவிய ரிஷப் பந்த்தின் செயல் ரசிகர்களிடையே நெகிழ்ச்சி ஏற்படுத்தியது. அவருக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கேப்டன் சுப்மன் கில்லுக்கு ரிஷப் பண்ட் உதவும் வீடியோ

 

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜேமி ஸ்மித், 82 பந்துகளில் 102 ரன்கள் அடித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றியுள்ளார். ஹாரி ப்ரூக் 91 ரன்களில் நின்றுள்ளார். மதிய உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 249/5 என்ற நிலையில் இருந்தது.. இருப்பினும் இந்தியாவின் மொத்த ஸ்கோர் 587 என்பதால், இலக்கை அடைய இங்கிலாந்து இன்னும் அதிக நேரம் களத்தில் இருக்க வேண்டியிருக்கும்.

ஜேமி ஸ்மித்தின் அதிரடி ஆட்டம்

இங்கிலாந்து அணி வீரர்கள் ஜூலை 4, 2025 அன்று காலை போட்டி தொடங்கிய முதல் இரண்டு மணிநேரத்தில் 27 ஓவர்களில் 172 ரன்கள் அடித்தனர். குறிப்பாக ப்ரசித் கிருஷ்ணா வீசிய ஓவரை ஜேமி ஸ்மித் வெளுத்து வாங்கினார். அவரது ஒரே ஓவரில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்து அசத்தினார். இதனால் இந்திய ரசிகர்கள் கலக்கம் அடைந்தனர்.

மேலும் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரது பந்து வீச்சையும் ஸ்மித் அதிரடியாக எதிர்கொண்ட ஸ்மித் ஆட்டத்தின் போக்கை தன் பக்கமே வைத்திருந்தார். அவரை இருவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. குறிப்பாக சுந்தரின் துவக்க ஓவர்களில் தொடர்ச்சியாக பவுண்டரிகள் மற்றும் ஜடேஜாவின் ஓவரில் சிக்ஸ் அடித்து ஸ்மித் சதம் அடிக்கும் வாய்ப்பை பெற்றார்.


இந்த நிலையில் மதிய உணவுக்கு முன் ஜடேஜாவின் பந்தியில் இரு பவுண்டரிகள் அடித்து தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை 80 பந்துகளில் அடித்து அசத்தினார். இது ஒரு இங்கிலாந்து வீரரால் அடிக்கப்பட்ட மூன்றாவது வேகமான சதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.