Rishabh Pant: அபாயத்தில் விராட் கோலி ரெக்கார்ட்.. விரட்டி பிடிப்பாரா ரிஷப் பண்ட்..? காத்திருக்கும் 2வது டெஸ்ட்!
India vs England 2nd Test: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் விராட் கோலியின் ரன் சாதனையை முறியடிக்க முயற்சிக்க உள்ளார். கோலி 231 ரன்கள் எடுத்திருக்க, பண்ட் 203 ரன்களுடன் 28 ரன்கள் பின்தங்கியுள்ளார். முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்த பண்ட், இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்ற வேண்டும். இந்திய அணி முதல் டெஸ்டை தோற்றிருப்பதால், இரண்டாவது டெஸ்ட் மிகவும் முக்கியமானது.

முதல் டெஸ்ட் தோல்விக்கு பிறகு இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை (IND vs ENG 2nd Test) பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் விளையாட உள்ளது. இந்த போட்டியானது நாளை அதாவது 2025 ஜூலை 2ம் தேதி தொடங்குகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போது இந்திய அணி நிச்சயமாக இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும். இந்த போட்டி இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-க்கு (Rishabh Pant) மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கலாம். ஏனென்றால், முன்னாள் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் (Virat Kohli) சிறப்பு சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை ரிஷப் பண்ட்-க்கு வாய்ப்புள்ளது. இந்த சாதனையை பண்ட் முறியடிக்க இன்னும் சில ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது.
கோலியின் சாதனையை முறியடிப்பாரா ரிஷப் பண்ட்..?
பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடந்த 2 போட்டிகளின் நான்கு இன்னிங்ஸ்களில் விராட் கோலி 231 ரன்கள் எடுத்துள்ளார். அவர் இந்த ரன்களை 57.75 சராசரியாக எடுத்துள்ளார். இந்த மைதானத்தில் விராட்டின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் 149 ரன்கள் ஆகும். ரிஷப் பண்டை பற்றிப் பேசுகையில், பண்ட் இதுவரை எட்ஜ்பாஸ்டனில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார், அதில் அவர் இரண்டு இன்னிங்ஸ்களில் 101.50 சராசரியுடன் 203 ரன்கள் எடுத்துள்ளார். இங்கு அவரது சிறந்த தனிநபர் ஸ்கோர் 146 ரன்கள் ஆகும்.




2022ல் சதம் அடித்த பண்ட்:
A RISHABH PANT MASTERCLASS IN EDGBASTON IN 2022. 🥶🇮🇳 pic.twitter.com/zTIADeKLfo
— Johns. (@CricCrazyJohns) July 1, 2025
இதன்மூலம், ரிஷப் பண்ட் கோலியை விட 28 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளார். மேலும் இரண்டாவது டெஸ்டில் இந்த சாதனையை முறியடிக்க விரும்புனார். கோலிக்கு பிறகு இந்த ஸ்டேடியத்தில் 216 ரன்கள் எடுத்து சுனில் கவாஸ்கர் 2வது இடத்தில் உள்ளார்.
முதல் டெஸ்டில் இரண்டு சதங்கள் அடித்த ரிஷப் பண்ட்:
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற முடியாவிட்டாலும், ரிஷப் பண்டின் பேட்டிங் அனைத்து ரசிகர்களின் இதயங்களையும் கவர்ந்தது. முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் எடுத்த ரிஷப் பண்ட், இரண்டாவது இன்னிங்ஸில் 118 ரன்கள் எடுத்தார். விராட் கோலி இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும், விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமானால், எட்ஜ்பாஸ்டனிலும் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்து ரிஷப் பண்ட் தனது அணிக்காக பெரிய ஸ்கோரைப் பெற வேண்டும்.
முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 371 ரன்கள் தேவைப்பட்டதுமீதமுள்ள 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியை இந்திய அணி தொடங்கியுள்ளது. இப்போது இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்யுமா என்பதை பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும்.