IND vs ENG 2nd Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் பும்ரா களம்.. உறுதியாக சொன்ன இந்திய உதவி பயிற்சியாளர்!
Bumrah's IND vs ENG 2nd Test Return: இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவார் எனத் தெரிவித்துள்ளார். பும்ரா முழுமையான உடற்தகுதியுடன் இருப்பதாகவும், அவரது பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த டெஸ்ட் போட்டி 2025 ஜூலை 2ம் தேதி தொடங்குகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கு (IND vs ENG 2nd Test) முன்னதாக இந்திய அணிக்கு நல்ல செய்தி ஒன்று கிடைத்துள்ளது. எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) கண்டிப்பாக இடம்பெறுவார் என இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட் (Ryan ten Doeschate) உறுதிப்படுத்தியுள்ளார். அதேநேரத்தில், பும்ரா விளையாவது குறித்து அணி நிர்வாகம் இன்னும் இறுதி முடிவை வெளிப்படுத்தவில்லை. இந்தியா – இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி 2025 ஜூலை 2ம் தேதி தொடங்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பும்ரா விளையாடுவாரா..?
இதுகுறித்து இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட், “ஜஸ்பிரித் பும்ரா இந்த ஆட்டத்திற்கு தயாராக இருக்கிறார் என்பது தெளிவாகிறது. தொடக்கத்திலிருந்தே பும்ரா 5 போட்டிகளில் 3ல் மட்டுமே விளையாடப் போகிறார் என்பது எங்களுக்கு தெரியும். கடைசி டெஸ்டில் இருந்து மீண்டு வர அவருக்கு 8 நாட்கள் இருந்தன என்பது தெளிவாகிறது. ஆனால் சூழ்நிலைகள், பணிச்சுமை மற்றும் அடுத்த 4 ஆட்டங்களுக்கு நாங்கள் எவ்வாறு சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்று நினைக்கிறோம் என்பதை கருத்தில் கொண்டு, நாங்கள் அதை பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை.




மற்றவர்கள் தங்கள் பணிச்சுமையுடன் எப்படி இருக்கிறார்கள் என்பதையும் நாங்கள் பார்க்க போகிறோம். எனவே, தொழில்நுட்ப ரீதியாக ஆம், பும்ரா தயாராக இருக்கிறார்.” என்று தெரிவித்தார்.
பயிற்சியில் ஈடுபட்ட பும்ரா:
India’s assistant coach Ryan ten Doeschate clears the air on Jasprit Bumrah’s availability for the 2nd Test. 🎙️🇮🇳#JaspritBumrah #ENGvsIND pic.twitter.com/esMOSj0fjn
— CricTracker (@Cricketracker) June 30, 2025
தொடர்ந்து பேசிய டென் டோஷேட், பும்ராவுடன் விளையாட தயாராக இருக்கிறார்கள். இந்த 4 டெஸ்ட் போட்டுகளையும் நாங்கள் எப்படி நிர்வகிக்கிறோம் என்பதுதான் முக்கியம். எனவே, இந்த டெஸ்டில் அவரை விளையாட வைப்பதில் மதிப்பு இருப்பதாக நாங்கள் நினைத்தால், கடைசி நிமிடத்தில் அந்த முடிவை எடுப்போம். ஆனால், ஆடுகளம் எப்படி விளையாட போகிறது என்பதை பற்றி நான் பேசுகிறேன். லார்ட்ஸ், ஒருவேளை மான்செஸ்டர் அல்லது ஓவல் அணிக்காக அவரை தடுத்து நிறுத்துவது நல்லதா..? எனவே, இவை அனைத்தும் அந்த காரணிகள்தான்.
ஆனால், நேற்று அதாவது 2025 ஜூன் 30ம் தேதி பயிற்சி பெறுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், இன்று அதாவது 2025 ஜூன் 30ம் தேதி கொஞ்சம் பயிற்சி பெற்றார். அதன்படி, பும்ரா முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். அவரிடமிருந்து அதிகபட்சத்தை பெற இந்திய அணி முயற்சிக்கும். நாங்கள் என்ன செய்தாலும், இந்த டெஸ்ட் போட்டியில் கடுமையாக முயற்சி செய்வோம். 2வது இன்னிங்ஸில் பும்ரா இல்லாமல் நாங்கள் வெற்றிக்கு அருகில் வந்தோம். பும்ரா எந்த விக்கெட்டுகளையும் எடுக்கவில்லை. எப்படியிருந்தாலும் ஒரே ஒரு பந்து வீச்சாளரை கொண்டு டெஸ்ட் தொடரை வெல்ல முடியாது. அடுத்த 24 மணிநேரத்தில் பும்ரா, எவ்வாறு நிர்வகிக்க போகிறோம் என்பதை நாங்கள் தீர்மானிப்போம்” என்றார்.