Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sivakarthikeyan : விக்ரம் வேதா பட இயக்குநருடன் புதிய படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்?

Sivakarthikeyan New Movie Update : தமிழில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் உருவாகிவரும் நிலையில், விக்ரம் வேதா பட இயக்குநர் புஷ்கர் - காயத்ரியுடன் புதிய படத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிவருகிறது. இதைப் பற்றி விவரமாகப் பார்க்கலாம்.

Sivakarthikeyan : விக்ரம் வேதா பட இயக்குநருடன் புதிய படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்?
புஷ்கர், காயத்ரி மற்றும் சிவகார்த்திகேயன்Image Source: IMDb
barath-murugan
Barath Murugan | Published: 05 Jul 2025 21:25 PM

தமிழில் சின்னதிரையில் இருந்து சினிமாவிற்கு சென்று, மக்களின் மனங்களில் இடம்பிடித்தவர்தான் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan)  . இவரின் நடிப்பில் தமிழில் இதுவரை 23 படங்கள் வெளியாகியிருக்கிறது. மேலும் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படமாக அமைந்தது அமரன் (Amaran) . இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Rajkumar Periyasamy) இயக்கத்தில் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் கதாபாத்திரத்தை விடவும், சாய் பல்லவியின் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் (A.R. Murugadoss) மற்றும் சுதா கொங்கராவின்  (Sudha Kongara) இயக்கத்தில் அடுத்தடுத்த புதிய படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இந்த இரு திரைப்படங்களும் இறுதிக்கட்ட பணிகளில் இருந்து வருகிறது. இதில் இயக்குநர் எஸ். ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் மதராஸி படமானது வரும் 2025, செப்டம்பர் 05ம் தேதியில் வெளியாகவுள்ளது.

அதை தொடர்ந்து சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகிவரும் பராசக்தி படம் (Parasakthi) , வரும் 2026ம் ஆண்டு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் புஷ்கர் – காயத்ரி (Pushkar Gayathri) இயக்கத்தில் புதிய படத்தில் இணையவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது.

இவர்கள் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடித்திருந்த விக்ரம் வேதா படத்தை இயக்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தனது 26வது திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் புஷ்கர்- காயத்ரி இயக்கத்தில் இணையவுள்ளார் எனக் கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :

விக்ரம் வேதா திரைப்படம் :

கடந்த 2017ம் ஆண்டு விஜய் சேதுபதி, மாதவன் முன்னணி நடிப்பில் வெளியான படம் விக்ரம் வேதா. இந்த படத்தின் மூலமாகதான் இயக்குநர் புஷ்கர் – காயத்ரி தமிழ் சினிமாவில் பிரபலமாகினர். அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் திரில்லர் கதைக்களத்துடன் வெளியான இப்படமானது நல்ல வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்திருந்தது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி , வதந்தி, சுழல் போன்ற வெப் தொடர்களை தயாரித்திருந்தனர். இதுவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் புதிய திரைப்படம் :

நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி மற்றும் மதராஸி திரைப்படங்களைத் தொடர்ந்து, குட் நைட் படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் தனது 24வது படத்தில் இணையவுள்ளார். இது தொடர்பான தகவல்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை உறுதிப்படுத்தும் விதத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் விநாயக் சந்திரசேகரின் பிறந்தநாளின் போது வாட்ச் பரிசாக அளித்திருந்தார்.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த படத்தின் அறிவிப்புகளும் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிவருகிறது. இது தொடர்பான அப்டேட்டும் விரைவில் வெளியாக்குவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.